Thursday, April 4, 2013

வடக்கே தலை வைக்காதே!


வடக்கில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று இந்து மத சாத்திர நூல்கள் கூறுகின்றன. சதாசாரம் என்னும் நூல் நாம் அன்றாடம் பின்பற்றவேண்டிய பழக்க வழக்கங்களைப் பற்றிக் கூறுகிறது. மற்ற திசைகளில் தலை வைத்துப் படுக்கலாம். இந்த சாத்திர விதிக்கு ஏதேனும் விஞ்ஞான விளக்கம் உண்டா என்று கேட்டால் “உண்டு” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம்.
காம்பஸ் என்னும் திசை காட்டும் கருவியை நாம் அறிவோம். அதன் ஊசி எப்போதும் வடக்கு திசையையே காட்டிக் கொண்டிருக்கும்
புல் மேயப் போகும் மாடுகளும் காட்டில் திரியும் மான்களும் ஒரே திசையை நோக்கி நின்றுகொண்டு புல் மேய்வதைக் கண்ட விஞ்ஞானிகள் ஆச்சரியப் பட்டார்கள். அவை ஏன் இப்படி நின்று புல் மேய்கின்றன என்பது நீண்ட காலமாகப் புரியாத புதிராகவே இருந்தது. இப்போழுது கூகுள் விண்கல புகைப்படங்களை வைத்து ஆராய்ந்ததில் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன
 
 
 
 

No comments:

Post a Comment