கற்பூரம் ஏற்றுவது ஏன்?
(பயன்படுத்திய
நூல்கள்: 1) இந்துமத தத்துவங்களும் சடங்குகளும்- பேராசிரியர் டி.கே.
நாராயணன்; 2) இந்து சமயக் களஞ்சியம்—மு.திரவியம், 3) இந்துமதம் பதில்
அளிக்கிறது,பகுதி-3, தொகுப்பு எஸ்.லட்சுமி சுப்பிரமண்யம்).
Q) Why do we light camphor in temples? A)The answer is available in English as well.
“தீப மங்கள ஜோதி நமோ நமோ
தூய அம்பல லீலா நமோ நமோ” (திருப்புகழ்)
“தமசோ மா ஜோதிர் கமய”
(இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச் செல்: பிருஹத் ஆரண்யக உபநிஷத்)
1.ஏன் இறைவனுக்கு கற்பூரம் காட்டுகிறோம்? (கு.அருள் ஜெகன் கேட்ட கேள்வி)
அ)
கோவில்களில் கடவுளின் பிரதிமை/ உருவம் உள்ள கர்ப்பக்கிரகம் (கருவறை)
இருட்டாக இருக்கும். பழங் காலத்தில் மின் விளக்குகள் கிடையாது.புகை,
எண்ணெய் முதலியன பட்டு மூர்த்தியின் உருவம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக
பல கோவில்களில் வெளியே தான் விளக்குகள் வைக்கப்பட்டு இருக்கும். கற்பூரமோ
நெய் விளக்கோ காட்டும்போது கடவுளின் உருவம் நன்கு தெரியும். அப்போது பட்டர்
அல்லது அர்ச்சகர் அந்தக் கோவிலின் , மூர்த்தியின் பெருமையை மனப்பாடமாக
ஒப்புவிப்பார். இது புத்தகத்தில் படித்துச் சொல்லும் விஷயம் அல்ல. அவர்
கூறுவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செவி வழி மூலம் பெறப்பட்ட அரிய விஷயம்.
அவ்வாறு ஒருவர் சுவாமியின் மீது வெளிச்சம் போட்டுக் காட்டி,
விவரிக்கும்போது நமது முழு கவனமும் அதன் மீது இருக்கும். இவ்வாறு மனம்
குவியும்போது நாம் செய்யும் பிரார்த்தனை அப்படியே நிறைவேறும். அப்போது
கடவுளைத் தரிசனம் செய்யும் எல்லோரும் ஒரே ‘வேவ் லெந்த்’தில் இருப்பதால்
இறையருள் பெறுவது எளிதாகிறது.
No comments:
Post a Comment