Monday, December 30, 2013

நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள் !



நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்! ''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும், இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’ இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது’ நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை. உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது. நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம். எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு’ என்றார் மறைந்த பசுமை நாயகன் நம்மாழ்வார். - விகடன்

Monday, December 23, 2013

கடலோரக் காதலன்!

கடலோரக் காதலன்!



பௌர்ணமி நிலவில் , பனி விழும் இரவில் !
கடலோரக் கரையினில், நடந்து நான் செல்லுகையில் !
அலையின் நுரை என்னை வந்து தீண்டியது !
ஆனந்தத்தில் என் விழி சிந்திய நீரை, தென்றல் துடைத்துச்  சென்றப் போது !
ஆனந்தமே ஆனந்தமே, பரமானந்தமே !



- இவன் -

அருள் செகன் குணசீலன் 

Friday, December 20, 2013

நவீன தமிழ் அருஞ்சொற்பொருள் - பகுதி 2 !

B - வரிசை

BABCHI SEEDS - கற்பகரிசி கற்பூரவரிசி
BACKBITING - புறங்கூறல்
BACTERIA - குச்சியம்/குச்சியங்கள்
BACKGAMMON - சொக்கட்டான்
BACKWATER - உப்பங்கழி, காயல், கடற்கழி
BACKYARD - புறங்கடை, புழக்கடை, கொல்லை
BACON - உப்புக்கண்டம்
BADMINTON BALL - பூப்பந்து
BADGE - வில்லை
BAKER - வெதுப்பகர்
BAKERY - அடுமனை, வெதுப்பகம்
BAIT - இரை
BALANCE SHEET - ஐந்தொகை
BALCONY - மேல்மாடம், மேன்மாடம், உப்பரிகை
BALL - பந்து
BALL BADMINTON- பூப்பந்தாட்டம்
BALL BEARING - மணித்தாங்கி
BALL-POINT PEN - (பந்து)முனை எழுதுகோல்
BALOON - வளிக்கூண்டு, வாயுக்கூண்டு, புகைக்கூண்டு
BANDAGE - கட்டு
BANK (MONEY) - வைப்பகம்
BANK (RIVER) - ஆற்றங்கறை
BANNER - பதாகை
BANYAN TREE - ஆலமரம்
BAR (DRINKS) - அருந்தகம்
BAR CODE - பட்டைக் குறியிடு
BARBER - நாவிதன்
BARBADOS CHERRY - சீமைநெல்லி
BARGAIN - பேரம் பேசு
BARIUM - பாரவியம்
BARK (TREE) - மரப்பட்டை
BARLEY - வால்கோதுமை
BARRACUDA - சீலா மீன்
BARRISTER - வழக்குரைஞர்
BASE PAY - தேக்கநிலை ஊதியம்
BASEBALL - அடிப்பந்தாட்டம்
BAT (ANIMAL) - வவ்வால்
BAT (SPORT) - மட்டை
BATALLION - பட்டாளம்
BATH-TUB - குளியல் தொட்டி
BATTLE-FIELD - போர்க்களம், செருக்களம்
BATSMAN (CRICKET) - மட்டையாளர்
BATTER (BASEBALL) - மட்டையாளர்
BAY - விரிகுடா
BEAM - உத்திரம்
BEAVER - நீரெலி
BEE'S WAX - தேன்மெழுகு
BEER - தோப்பி
BEETROOT - செங்கிழங்கு
BELLY-WORM - நாங்கூழ், நாங்குழு
BELT (WAIST) - இடுப்பு வார்
BERRY - சதைக்கனி
BERYLIUM - வெளிரியம்
BIBLE - வேதாகமம்
BICEPS BRANCHII MUSCLE - இருதலைப்புயத்தசை
BICEPS FEMORIS MUSCLE - இருதலைத்தொடைத்தசை
BICEPS MUSCLE - இருதலைத் தசை
BICYCLE - மிதிவண்டி,
BILBERRY - அவுரிநெல்லி
BILE - பித்தம்
BILL - விலைப்பட்டியல்
BILLIARDS - (ஆங்கிலக்) கோல்மேசை
BILLION - நிகற்புதம்
BINOCULAR - இரட்டைக்கண்நோக்கி
BISCUIT - மாச்சில்
BISMUTH - அம்பரை, நிமிளை, மதுர்ச்சி
BISON - காட்டேணி
BIT - துணுக்கு
BLACK - கருப்பு, கார்
BLACK GRAM - உளுத்தம் பருப்பு
BLACK EYED PEAS - வெள்ளை காராமணி
BLACKBERRY - நாகப்பழம்
BLACKBUCK - வேலிமான்
BLACKSMITH - கொல்லர்
BLADE - அலகு
BLEACHING POWDER - வெளுப்புத் தூள், வெளிர்ப்புத் தூள்
BLENDER - மின்கலப்பி
BLISTER PACK - கொப்புளச் சிப்பம்
BLUE - நீலம்
BLUEBERRY - அவுரிநெல்லி
BLUE VITRIOL - மயில்துத்தம்
BLUE-BELL - நீலமணி
BLUNT - மொண்ணையான, மொண்ணையாக
BLOOD VESSEL - குருதி நாடி, ரத்தக் குழாய்
BLOTTING PAPER - உறிஞ்சுதாள்
BOA (CONSTRICTOR) - அயகரம்
BOAT - தோணி, படகு
BOAT HOUSE - படகுக் குழாம்
BOILER - கொதிகலன்
BODYGUARD - மெய்க்காப்பாளர்
BOMB - வெடிகுண்டு
BONE, BONE MARROW - எளும்பு, மஜ்ஜை
BOOK - புத்தகம், நூல்
BOOK-KEEPING - கணக்குப்பதிவியல்
BOOMERANG - சுழல்படை
BOOT (FOOTWEAR) - ஜோடு
BOTHERATION - உபாதை
BORAX - வெண்காரம்
BORDER - எல்லை
BOREDOM - அலுப்பு
BOREWELL - ஆழ்குழாய் கிணறு
BORING - அலுப்பான
BORON - கார்மம்
BORROW - இரவல் வாங்கு
BOTTLE GOURD - சுரைக்காய்
BRAILLE - புடையெழுத்து
BRAKE - நிறுத்தான், நிறுத்தி
BRASS - பித்தளை
BRASSIERE - மார்க்கச்சு
BRAVADO - சூரத்தனம்
BREAD - ரொட்டி
BREWER'S YEAST - வடிப்போனொதி
BRIEFCASE - குறும்பெட்டி
BRIDGE - பாலம், வாராவதி
BRINJAL - கத்திரிக்காய்
BRITTLE, BRITTLENESS - நொறுங்கும், நொறுங்குமை
BROADBAND, BROADBAND CONNECTION - அகண்ட அலைவரிசை, அகண்டலைவரிசை இணைப்பு
BROCCOLI - பச்சைப் பூக்கொசு
BROKEN BEANS - மொச்சைக் கொட்டை
BROKER - தரகர்
BROKERAGE FIRM - தரககம்
BROMINE - நெடியம்
BRONZE - வெண்கலம்
BROOCH - அணியூக்கு
BRUISE - ஊமையடி
BRUSSELS SPROUTS - களைக் கோசு
BUBBLE WRAP - குமிழியுறை, குமிழிச் சிப்பம்
BUBONIC PLAGUE - அரையாப்பு(க்கட்டி)க் கொள்ளைநோய்
BUDGET - பொக்கிடு (வினை), பொக்கீடு
BUG (SOFTWARE) - இடும்பை
BUGLE - ஊதுகொம்பு
BULB (ELECTRIC) - மின்குமிழ்
BULLDOZER - இடிவாரி
BUN - மெதுவன்
BUNDLE - பொதி
BUOY (OF AN ANCHOR) - காவியா, காவியக்கட்டை
BURIAL URN - முதுமக்கள் தாழி
BURNER - விளக்குக்காய்
BUS - பேருந்து
BUS STOP - பேருந்து தரிப்பு, பேருந்து நிறுத்தம்
BUSH - புதர், பற்றை
BUSH (MECHANICAL) - உள்ளாழி
BUSINESS VISA - வணிக இசைவு
BUSY - வேலையாக/கம்மக்கையாக, வேலையான/கம்மக்கையான
BUTTER - வெண்ணெய்
BUZZER - இமிரி 


Tuesday, December 17, 2013

நவீன தமிழ் அருஞ்சொற்பொருள் - பகுதி1

A - வரிசை 

ABACUS மணிச்சட்டம்
ABBREVIATION குறுக்கம்
ABDUCTION ஆட்கடத்தல்
ABROAD வெளிநாடு
ACCESSORY துணைக்கருவி
ACCOUNTANT கணக்கர்
ACORUS வசம்பு
ACQUISITION கையகப்படுத்தல்
ACRE இணையேர்
ACROBAT, ACROBATICS - கழைக்கூத்து, கழைக்கூத்தாடி
ACT (OF LAW) கட்டளைக்கோல், கட்டளைச்சட்டம்
ACTINIUM நீலகம்
ACTIVITY செய்கைப்பாடு
ADAM'S APPLE கண்டம்
ADAPTATION (DRAMA, MUSIC ETC) தழுவல்
ADHESION ஒட்டுப்பண்பு
ADHESIVE பசைமம்
ADJECTIVE பெயர் உரிச்சொல்
ADRENAL GLAND, ADRENALINE அண்ணீரகம், அண்ணீர்
ADVANCE (MONEY) முன்பணம், உளவாடம்
ADVERB வினை உரிச்சொல்
AERIAL (ANTENNA) வானலை வாங்கி
AEROBRIDGE விமானப் பாலம், வான்பாலம்
AEROGRAMME வான்மடல்
AEROPLANE விமானம், பறனை
AEROSOL சொட்டூதி
AGENT முகவர்
AGENCY முகமையகம்
AGRICULTURAL TRACT பானல்
AGRICULTURE கமம், விவசாயம், வேளாண்மை
AIDS (ACQUIRED IMMUNO DEFICIENCY SYNDROME) வேட்டைநோய், உடற்தேய்வு நோய்
AILERON இரக்கைத் துடுப்பு
AIR காற்று
AIR BAG (காப்புக்) காற்றுப்பை
AIR-CONDITIONER குளிரூட்டி, குளிர்சாதனம், பனிக்காற்றுப்பெட்டி
>AIR-COOLER காற்றுப் பெட்டி
AIR FRESHENER காற்றினிமைத் திவலை
AIR MAIL வானஞ்சல்
AIR POCKET காற்று வெற்றிடம்
AIR WAYBILL வான் பார‌ப்ப‌ட்டி
AIRCRAFT வானூர்தி
AIRCRAFT CARRIER AIRCRAFT CARRIER
AIRHOSTESS விமானப்பணிப்பெண்
AIRLINE வானூர்தி
AIRLINER முறைவழி விமானம், முறைவழி வானுர்தி
AIRPORT பறப்பகம், வானூர்தி நிலையம், வானிலையம்
AIRSPACE வானெல்லை

APPOINTMENT (JOB) பணி அமர்த்தம்
APPOINTMENT (MEETING) (சந்திப்பு) முன்பதிவு
APPROACH (v.) அண்மு (வினைவேற்சொல்), அணுகு (வினைவேற்சொல்)
APRON (AIRPORT) ஏற்றிடம்
 APRON (KITCHEN) சமயலுடை
AQUAMARINE இந்திரநீலம்
ARBITRATION POWERS யதேச்சாதிகாரம், மேலாண்மையுரிமை
ARC LAMP வில் விளக்கு
ARCH தோரணவாயில், வளைவு
ARCH BISHOP பேராயர்
ARCH DIOCESE பேராயம்
ARECANUT பாக்கு
ARENA கோதா
ARMED ஆயுதபாணி
ARMNAMENT படைக்கலம்
ARREARS ஆண்டைச்சிகை, நிலவுத்தொகை
ARROGANCE ஆணவம், தெனாவெட்டு
ARROWROOT கூவை
ARSENIC பிறாக்காண்டம்
ARTERY தமனி
ARTILARY பீரங்கிப் படை
ARTHRITIS கீல்வாதம், மூட்டுவாதம்
ARTISAN கைவினைஞர்
ASAFOETIDA பெருங்காயம்
ASBESTOS கல்நார்
ASPARAGUS தண்ணீர்விட்டான்
ASPHALT நிலக்கீல்
ASSASINATION வன்கொலை
ASSEMBLY (MANUFACTURING) ஒன்றுகூட்டல்
ASSEMBLY (STRUCTURE) கட்டகம்
 ASSEMBLY LINE ஒன்றுகூட்டு வரிசை
ASSUMPTION தற்கோள்
ASSURANCE காப்பீட்டுறுதி
 ASTEROID சிறுகோள்
ASTONISHMENT திகைப்பு, ஆச்சரியம்
ASTRONAUT விண்வெளி வீரர்
AUGUST கடகம் மடங்கல்
AUTHENTICITY, AUTHENTIC சொக்க(மான), சொக்கம்
ATTAIN (v.) எய்து (வினை வேற்சொல்)
ATTENDANT ஏவலாள்
ATHLETICS தடகளம்
ATOL பவழத்தீவு
ATOMIC BOMB அணுகுண்டு
ATONEMENT பரிகாரம், பிராயச்சித்தம்
AUDIO கேட்பொலி
AUDIO CASSETTE ஒலிப்பேழை
AUTOMATIC TELLER MACHINE (ATM) தானியங்கி பணவழங்கி
AUTOMOBILE உந்துவண்டி, தானுந்து
AUTORICKSHAW தானி
AUTUMN கூதிர்காலம், இலையுதிர்காலம்
AQUA REGIA அரசப்புளியம்
AVAILABLE, AVAILABILITY கிடைக்கும், கிடைக்கப் பெறுதல்
AVALANCHE பனிச்சரிவு
AVENUE நிழற்சாலை
AVIATION பறப்பியல்
AVIONICS பறப்பு மின்னணுவியல்
AVOCADO வெண்ணைப் பழம்
 AXLE இருசு, அச்சாணி


Saturday, October 5, 2013

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?

   டம் : -தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு
திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?

திருமணவழைப்பிதழ்கள் மட்டுமல்ல.

ஒருவர் இன்னொருவரிடம் பொருளொன்றை கடனாகக்கொடுக்கையில் தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.

அரிசி, நெல் முதலானவற்றை கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.
பணமாயிருந்தால் தட்டு.

இது எதனாலென்றால், கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில்
மேல்கீழாய் இருந்தாலும் அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே.

வெறுமனே கையால் கொடுத்தால், கொடுப்பவர்கை மேலும் வாங்குபவர்கை கீழுமிருக்கும்.

இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நம்மவர்களின் மனதுள் தோன்றக்கூடாதென்பதற்காகவே
எப்பொருளை கொடுத்தாலும் தட்டில் வைத்துக்கொடுப்பதயே பழக்கமாகக்கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள்.

இதே முறைதான் ஒருவரை அழைப்பதிலும் இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது.

# அழைப்பிதழ் கொடுக்கப்போகும்போது
கூடவே தாம்பூலத்தட்டையும் எடுத்துச்செல்லுங்கள்..


நன்றிகள்:
- தமிழ் பொன்மொழிகள்

Wednesday, October 2, 2013

மூக்கு காது குத்துவதினால் ஏற்படும் விஞ்யான மாற்றம் !

மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை ,காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும். இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும். இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது. பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன். இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது. ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர். உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும். தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்.

நன்றி 
Marma Yogi


Saturday, September 14, 2013

கடவுளுடன் ஒரு பேட்டி !


நன்றி பா.#கல்யாணசுந்தரம் .

ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது எனக்கு...
“உள்ளே வா” – அழைத்த #கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?”
“ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்”
கடவுள் சிரித்தார்.
“என் நேரம் முடிவற்றது எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?”

“மனித இனத்தில் உங்களை ஆச்சரியப்படுத்துவது எது?”

கடவுள் சொன்னார்…
“மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்…

ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான்.

பணத்துக்காக உடல்நலனை இழக்கிறான்… பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான்!

எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான்…

நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு இல்லாமலே போகிறது!

சாகாமல் இருக்க வாழ்கிறான்… ஆனால் வாழாமலே சாகிறான்…”

கடவுளின் கைகள் லேசாக அசைந்தன.. சில நொடிகள் மவுனம்.

“ஒரு தந்தையாக, இந்த பூமியில் உள்ள உங்களின் பிள்ளைகளுக்கு சொல்ல விரும்பும் வாழ்க்கைப் பாடம் என்ன?”
-மீண்டும் கேட்டேன்.

கடவுளிடமிருந்து ஒரு புன்னகை…
“கண்ணா… யாரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று வலுவில் முயற்சிக்காதே… நேசிக்கப்படும் அளவு நடந்து கொள்.

வாழ்க்கையில் ஒருத்தன் சம்பாதிச்சது மதிப்புள்ளதல்ல… அதை எப்படிச் சம்பாதிச்சான் என்பதில்தான் அந்த மதிப்பிருக்கு.

ஒன்றைவிட மற்றொன்று சிறந்தது என்று ஒப்பிடுவதே கூடாது.

எல்லாம் இருக்கிறவன் பணக்காரன்னு நினைக்காதே…

உண்மையில் யாருக்கு தேவை குறைவோ அவன் தான் பணக்காரன்!
-------------------------------------------------------------------------------------------
நாம் நேசிக்கும் ஒருத்தரை புண்படுத்த சில நொடிகள் போதும்… ஆனால் அதை ஆற்ற பல ஆண்டுகள் ஆகும்.

நம்மை நேசிக்கும் பலருக்கு அதை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் இருப்பது தான் நிஜம்…

பணம் இருந்தா எல்லாத்தையும் வாங்க முடியும்னு நினைக்கிறது தப்பு, சந்தோஷத்தை ஒருபோதும் வாங்க முடியாது.

இரண்டு பேர் ஒரே விடயத்தைப் பார்த்தாலும், அவர்கள் பார்க்கும் விதம் வேறு வேறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்.

ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம், சக நண்பனைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும்.
எந்த சூழலிலும் அவனை விரும்புவதுமே!

அடுத்தவனை மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும் தன்மை வேண்டும்…

நீ சொன்னதை மற்றவர் மறக்கலாம்… நீ செய்தததையும் மறந்து போகலாம். ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!”

-பேட்டி முடிந்தது என்று சொல்லும் விதமாக கண்களால் சிரித்தார் கடவுள், அவரது கதவுகள் மூடின.

தேவையானது கிடைத்த சந்தோஷத்துடன் விழித்தெழுந்தேன் நான்!

தற்காலிகமாக இப்போது உறங்கச் செல்கிறேன்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

#நன்றி பா.#கல்யாணசுந்தரம் .

மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் புதையல் !


              மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் உயிர் சக்தியே குண்டலினி ஆகும்.இந்து மதத்தில் பாம்பு பெரும்பான்மையான இடங்களில் வணங்கப்படுகிறது. கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்களில் “சிலை”ப்படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன் படுத்தப்படுகிறது. ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம்.
மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் புதையல்;
--------------------------------------------------------
மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் உயிர் சக்தியே குண்டலினி ஆகும்.இந்து மதத்தில் பாம்பு பெரும்பான்மையான இடங்களில் வணங்கப்படுகிறது. கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்களில் “சிலை”ப்படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன் படுத்தப்படுகிறது. ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம். 

ஒரு பாம்பு அசை யாமல் இருக்கும் போது அது  இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர வென்று ஓடும் போது தான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினி யும் இந்தப் பாம்பு போன்றதுதான். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப் பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும் போதுதான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்து வமும் நமக்குப் புரியும்.

நமது உடலில் பிராண சக்தி எழுபதாயிரம் நாடிகளில் பாய்கிறது.இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு சக்கரங்களில் இணைகிறது.இவை ஆற்ரல் மையங்கள் என சொல்லப்படுகின்றது.கீழிருந்து மேலாக மூலாதாரம்,சுவாதிஷ்டானம்,மணிப்பூரகம்,அனாகதம்,விசுக்தி,ஆக்ஞை,சஹஸ்ரஹாரம்.

சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத்  தூண்டப்படுவது இல்லை. பெரும் பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அரைகுறையாய் தூண்டப்பட்டிருப்பதிலேயே வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். வெகுசிலர்தான் நான்கு வரை வருகிறார்கள். ஏழு சக்கரங்களும் தூண்டப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம்.

இந்தக் குண்டலினியின் முக்கிய செயல்பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவது தான். அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல குண்டலி னியை எழுப்பி, சக்கரங்களைத் தூண்டும் போது மனிதனின் அளப்பறியா ஆற்றல் வெளிப்படுகிறது.

அது சரி, இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படி? அதை எழுப்ப மனிதனுக்குக் கிடைத்த அற்புதமான கருவிகள் தான் யோகாவும் தியானமும் ஆகும்.யோகாவை முறையான குருவிடம் கற்று நாமும் குண்டலினி சக்தியை எழுப்பி ஆற்றலை அனுபவிக்கலாம்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.ஒரு பாம்பு அசை யாமல் இருக்கும் போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர வென்று ஓடும் போது தான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினி யும் இந்தப் பாம்பு போன்றதுதான். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப் பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும் போதுதான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்து வமும் நமக்குப் புரியும்.

நமது உடலில் பிராண சக்தி எழுபதாயிரம் நாடிகளில் பாய்கிறது.இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு சக்கரங்களில் இணைகிறது.இவை ஆற்ரல் மையங்கள் என சொல்லப்படுகின்றது.கீழிருந்து மேலாக மூலாதாரம்,சுவாதிஷ்டானம்,மணிப்பூரகம்,அனாகதம்,விசுக்தி,ஆக்ஞை,சஹஸ்ரஹாரம்.
சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத் தூண்டப்படுவது இல்லை. பெரும் பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அரைகுறையாய் தூண்டப்பட்டிருப்பதிலேயே வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். வெகுசிலர்தான் நான்கு வரை வருகிறார்கள். ஏழு சக்கரங்களும் தூண்டப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம்.

இந்தக் குண்டலினியின் முக்கிய செயல்பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவது தான். அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல குண்டலி னியை எழுப்பி, சக்கரங்களைத் தூண்டும் போது மனிதனின் அளப்பறியா ஆற்றல் வெளிப்படுகிறது.

அது சரி, இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படி? அதை எழுப்ப மனிதனுக்குக் கிடைத்த அற்புதமான கருவிகள் தான் யோகாவும் தியானமும் ஆகும்.யோகாவை முறையான குருவிடம் கற்று நாமும் குண்டலினி சக்தியை எழுப்பி ஆற்றலை அனுபவிக்கலாம்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

Tuesday, June 11, 2013

சூரிய வணக்கத்தில் இருக்கும் அறிவியல் !!!!!


நம் முன்னோர்கள் நம்மை விட அறிவில் சிறந்தவர்கள், ஏற்க மறுத்தாலும் இது தான் உன்மை, சரி நாம் நம்முடைய தலைப்பிற்கு வருவோம். சூரிய வணக்கத்தில் மாபெரும் அறிவியல் கூற்று மறைந்து இருக்கிறது, அதிகாலையில் சூரியனில் இருந்து வரும் கதிரில் நாம் நினைத்து பார்க்காத வகையில் பலன்கள் இருக்கிறது , அதிகாலையில் சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதா (Ultra Violet) கதிரில் வைட்டமின்-டி (Vitamin-D) குவிந்து இருக்கிறது.
இந்த வைட்டமின்-டி நம் உடலுக்கு அநேக வகையில் பயன் தருகிறது. உயிர்ச்சத்து டி (Vitamin D) எனப்படுவது கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் கொண்ட ஒரு குழுமம் ஆகும். உயிர்ச்சத்து டி2 (ஏர்கோகல்சிபெரோல்) மற்றும் உயிர்ச்சத்து டி3 (கோளிகல்சிபெரோல்) என்பன உடற்செயலியல் தொழிற்பாட்டுக்குத் தேவையான உயிர்ச்சத்து டி வகைகள் ஆகும், பொதுவாக எண்களால் டி உயிர்ச்சத்து சுட்டப்படாவிடின் டி2 அல்லது டி3 அல்லது இரண்டையும் குறிக்கும். முதுகெலும்பிகளில் உயிர்ச்சத்து டி3 தோலில் இருந்து சூரியனின் புறஊதாக்கதிர்களின் வினை மூலம் உருவாகுகின்றது, இதைவிட இயற்கையாகவே சில குறிப்பிட்ட உணவுப்பொருட்களில் இருந்தும் பெற்றுக்கொள்ளமுடியும், செயற்கையாகவும் இவ்வுயிர்ச்சத்து உருவாக்கப்படுகின்றது; சில நாடுகளில் பால், மா, தாவர வெண்ணெய் போன்றவற்றிற்கு உயிர்ச்சத்து டி செயற்கையாகச் சேர்க்கப்படுகிறது,

அதிகாலை சூரிய கதிரினால் ஏற்படும் நன்மைகள் :
1) மார்பு புற்று நோய் கட்டுப்படுத்தும்,
2) கெட்ட பாக்டீரியாக்களை அகற்றும்,
3) தோல் சம்ந்தப்ட்ட அணைத்து நோய்களையும் சுகப்படுத்தும்,
4) அதிக கொழுப்புச்சத்தயை குறைக்கும்,
5) இரத்தக் கொதிப்பை குறைக்கும்,
6) தோல்லின் அடிப்பகுதிக்கு சென்று இரத்ததையும் , இரத்த நாளங்களையும் சுத்திகரிக்கும்,
7) பிரனா வாயுவை உடலுக்குள் அதிக அளவில் புகுத்தும், இதனால் நம்முடைய உடல் வலிமைப் பெரும்,
8) நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும்.
9) மன அழுத்ததை குறைக்கும்,

முக்கிய குறிப்பு :
   அதிகாலையில் தினமும்  10-15 நிமிடங்கள் சூரிய கதிர்கள் நம்மீது பட்டால் போதுமானது.

        நண்பகலில் வெளிப்படும் சூரியக் கதிர் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும், ஏனவே அதனை தவிர்க்கவும்.


இத்தக்கைய பயனை தரக்கூடிய ஒன்று அனைவர்க்கும் சென்று அடைய வேண்டும் என்று தான் இதனை இறைவனுக்கு வணக்கம் என்று கற்பித்தார்கள், ஏனெனில் நம் முன்னோர்கள் இறைப் பக்தி அதிகம் கொண்டவர்கள். நாம் இந்த அறிவியலின் பயனை நம் தலைமுறைக்கு கற்றுத் தந்து நாமும் பின்பற்றி நோயின்றி ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்.

உசாத்துணைகள்:


Monday, June 10, 2013

தாய் நாட்டை நேசிப்பவர்கள் இந்த வாக்கியத்தை தினமும் மனத்திற்குள் சொல்லவும்!

நாடு என்ன செய்தது நமக்கு என்று கேட்ப்பதை நிறுத்து,
நீ என்ன செய்தாய் அதற்க்கு என்னும் கேள்வியை மனதில் எழுப்பு!!!!!!!


Monday, May 20, 2013

ரோஹிணி! நட்சத்திர அதிசயங்கள் - பகுதி 2



நட்சத்திர அதிசயங்கள்
 சிவ புராணம் கூறும் ரோஹிணியின் கதையைப் பார்த்தோம்.மஹாபாரதம் கூறும் கதையின் விளக்கத்தைப் பார்ப்போம்!
நிலவைக் கவர்ந்த ரோஹிணி! – 2
ச.நாகராஜன்

மஹாபாரதக் கதையின் உட்பொருள் :

வானத்தின் சுழற்சி கடிகார முள் இடமிருந்து வலமாகச் சுழலுவது போன்ற சுழற்சி!க்ளாக்வைஸ் சுழற்சி என்று சாதாரணமாக இதைக் கூறுகிறோம்.இடைவிடாது சுழலும் வானச் சுழற்சியில் மாறாத நட்சத்திரமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தை அடையாளமாக வைத்துக் கொண்டே வானத்தின் திசையைக் கணிக்க வேண்டியதாக இருக்கிறது.ஆனால் இந்த துருவ நட்சத்திரம் கூட  சுழற்சியில் மிக மிகச் சிறிய அளவில் இடம் பெயர்கிறது.

துருவ நட்சத்திரத்தை முதலில் பார்த்த அதே இடத்தில் பார்க்க சரியாக 25710 ஆண்டுகள் ஆகிறது, (கணித சௌகரியத்திற்காக 26000 ஆண்டுகள் எனக் கொள்வோம்)செலஸ்டியல் ஈக்வேஷன் எனப்படும் வானத்து ரேகை ஒவ்வொரு நட்சத்திரத்தின் வழியாகவும் ஒவ்வொரு கால கட்டத்தில் போகும்.கி.மு 2700ல் இந்த வானத்து ரேகை ரோஹிணியின் வழியே சென்றது.இந்தக் கால கட்டத்தில் தான் நட்சத்திரங்களை ஒரு புதிய அமைப்பின் கீழ் கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.ஆகவே படைப்பு உந்துதல் உண்டான ப்ரஜாபதி ரோஹிணியை ‘பழைய இடத்திற்குச் செல்ல’ வைத்தார்.பல காலம் களை இழந்திருந்த ரோஹிணி வெட்கத்தால் சிவந்து புதிய பொலிவுடன் கவர்ச்சியுடன் போனாள்.மஹாபாரதம் கூறும் கதையின் உட்பொருள் வானியல் ரீதியாக இது தான்!


ரோஹிணி! நட்சத்திர அதிசயங்கள் - பகுதி 1


 


                                         Aldebaran= star Rohini
நட்சத்திர அதிசயங்கள்:

வானில் உள்ள மர்மங்களைப் புரிந்து கொள்ள சிவ புராணத்தைப் படிக்க வேண்டும். நட்சத்திரத் தோற்றம், அவற்றின் இயல்புகள் மற்றும் மர்மங்களை அற்புதமாக விளக்குகிறது சிவ புராணம். நிலவைக் கவர்ந்த நிலவின் காதலி ரோஹிணியைப் பற்றிப் பார்ப்போம்

நிலவைக் கவர்ந்த ரோஹிணி! – Part 1

By ச.நாகராஜன் Santanam Nagarajan

சிவ புராணம் கூறும் ரோஹிணியின் கதை:

வானில் உள்ள மர்மங்களைப் புரிந்து கொள்ள சிவ புராணத்தைப் படிக்க வேண்டும். நட்சத்திரத் தோற்றம், அவற்றின் இயல்புகள் மற்றும் படைப்பு மர்மங்களை அற்புதமாக விளக்குகிறது சிவ புராணம்.
தட்சன் தனது புத்திரிகள் 27 பேரை சந்திரனுக்கு மணம் செய்து வைத்தான். சந்திரன் ரோஹிணியின் பால் தீராத காதல் கொண்டான்.மற்ற இருபத்தி ஆறுபேரையும் புறக்கணித்து ரோஹிணியை மட்டும் பிரியாமல் எப்போதும் அவள் கூடவே இருந்தான்.இதனால் மனம் வருந்திய இருபத்தி ஆறு பேரும் தங்கள் தந்தையான தட்ச ப்ராஜாபதியிடம் சென்று முறையிட்டனர்.தட்சனுக்கு எல்லையற்ற கோபம் உண்டானது. அவன் சந்திரனை அழைத்துக் கடுமையாக எச்சரித்தான். ஆனால் சந்திரனோ அந்த எச்சரிக்கையை சட்டை செய்யவில்லை. தீராத மையலில் ரோஹிணியுடன் கூடவே இருந்தான்.இரண்டு முறை எச்சரித்தும் பயனில்லை.

பொம்பளை சிரிச்சா, உதைச்சா, பார்த்தா போச்சு !


பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு என்பது தமிழ் பழமொழி. ஆனால் பெண்கள் சிரித்தால் செண்பக மரம் பூக்கும் என்கிறது வடமொழி. பெண்களைப் போல் மரங்களுக்கும் மசக்கை (தோஹத) உண்டாம். பெண்களின் அன்புக்காக அவை ஏங்குமாம். தமிழர்களும் வேங்கை மரத்தை பெண்களின் திருமணத்தோடு இணைத்துப் பேசுவர். சங்க இலக்கிய நூல்கள் வேங்கை பரத்தின் அடியில் பெண்கள் புலி புலி என்று குரலிடுவதையும் அதனால் அது பூப்பதையும் குறிப்பால் உணர்த்தும்.

பெண்கள் எத்தனை வகை?

பெண்களை வடமொழி வித்தகர்கள் நாலு வகையாகவும், பரத சாஸ்திர அறிஞர் பரத ரிஷி எட்டு வகையாகவும் தமிழர்கள் வயதின் அடிப்படையில் ஏழு வகையாகவும், ஜப்பானியர்கள் ஒன்பது வகையாகவும், ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் டி.என்.ஏ. அடிப்படையில் ஏழு வகையாகவும் பிரித்தனர்.

பத்மினி, சங்கினி,ஹஸ்தினி, சித்ரினி

பத்மினி பெண்களைப் பார்ப்பது அபூர்வம். அவர்கள் மிகவும் அழகானவர்கள், மென்மையானவர்கள்,புனிதமானவர்கள். முகம் வட்ட வடிவம் உடையது. உடலும் உருண்டு திரண்டு இருக்கும். அவர்கள் சுஹாசினி (மலர்ந்த முகம்) சுபாஷினி ( இனிய சொல்), சாருஹாசினி (புன்சிரிப்புடையோர்) ஆவர். அழகிய கவர்ச்சிகரமான பார்வையால் எதிரிகளையும் தேவர்களையும் வசப்படுத்துவர்.

மேலும் படிக்க....

Sunday, May 19, 2013

எந்த வேலையைத் தேர்ந்தெடுப்பது? எந்த படிப்பு படிப்பது ?

 
       
                              
                                              ச.நாகராஜன்

  எந்தத் துறையைத் தேர்ந்தெப்பது, எந்த வேலையைச் செய்ய வேண்டும் என்ற கேள்வி இன்றைய இளைஞர்கள் அனைவருக்கும் எழும் ஒரு கேள்வி. இதற்குப் பண்டைய கவிஞர் தரும் விடை பொருள் பொதிந்த ஒன்று.
யத்கர்ம குர்வதோஸ்ய ஸ்யாத்பரிதோஷோந்தராத்மன: I
தத் ப்ரயத்னேன குர்வித விபரீதம் து வர்ஜயேத் II

(யத் – எந்த கர்ம – வேலை விபரீதம் – விபரீதமானதை
வர்ஜயேத் – தவிர்த்தல் வேண்டும்)
எந்த வேலையானது சந்தோஷத்தைத் தருமோ அதை மட்டுமே செய்ய வேண்டும்.அதற்கு மாறாக உள்ள எதையும் தவிர்த்து விட வேண்டும்.
ஆக மனதிற்குப் பிடித்த படிப்பைத் தேர்ந்தெடுத்து அதில் தேறி அந்தத் துறையில் வேலையில் சேர்ந்து அதில் முன்னேற வேண்டும்.இதுவே கவிஞர் தரும் அறிவுரை.
சரி, எப்படிப்பட்ட பணம் நம்மிடம் நிலைக்கும்? இந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்கிறது:
அக்ருத்வா பரசந்தாபமகத்வா கலமந்திரம் I
அயாசித்வா பரம் கச்சித் யத் ஸ்வல்பமபி தத்பஹு II
(ஸ்வல்பம் – குறைவாக; தத் பஹு – அதுவே அதிகம்)

மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல்
ஒரு ரௌடியின் வீட்டிற்கும் செல்லாமல்
யாரிடமும் பிச்சை எடுக்காமல்
சொல்பமாகக் கிடைத்தாலும் கூட எனக்கு எது கிடைக்கிறதோ
அதுவே எனக்கு அதிகம்.

அற வழியில் மற்றவர்களைக் கொள்ளை அடிக்காமல், கீழான ஒருவனின் தயவுமின்றி, லஞ்சம் கொடுக்காமல். எனக்குப் பிடித்த வேலையைச் சந்தோஷமாகச் செய்யும் போது எனக்கு எந்த வருவாய்  கிடைக்கிறதோ அதுவே எனக்குப் போதும் !
இந்த மனப்பான்மை தொன்றுதொட்டு இந்த நாட்டில் இருந்து வந்திருக்கிறது. ஆகவே கிராமங்களில் வாழ்ந்து வந்தவர்கள் கூட மனத் திருப்தியுடன் நன்கு வாழ்ந்து வந்தனர்.
என்று ஆங்கிலேயன் வகுத்த ஆபீஸும் அதில் ‘குமாஸ்தா; உத்தியோகமும் வந்ததோ அன்றிலிருந்து கல்வி முறையானது உத்தியோகம் சார்ந்ததாக ஆகி அதற்கான டிகிரிகளை அச்சிட்டுத் தரும்
ஒரு வழிமுறையாகி விட்டது!
சரி.  

இந்தக் கல்வி முறையை ஒரே நாளில் நம்மால் மாற்ற முடியாவிட்டாலும் கூட , நமக்குப் பிடித்த துறையையாவது தேர்ந்தெடுத்து முன்னேறலாம் இல்லையா! சிந்திப்போம், செயல்படுவோம்!!

Friday, May 3, 2013

தமிழ் மாதங்களும் அதற்க்கு இணையான ஆங்கில(கிராகோரியன்) மாதங்களும் !

No. தமிழ் மாதங்கள் Month (English) Sanskrit Name * Gregorian Calendar equivalent




01. சித்திரை Cittirai Chaitra mid-April to mid-May
02. வைகாசி Vaikāci Vaisākha mid-May to mid-June
03. ஆனி Āni Jyaishtha mid-June to mid-July
04. ஆடி Āṭi Āshāḍha mid-July to mid-August
05. ஆவணி Āvaṇi Shrāvaṇa mid-August to mid-September
06. புரட்டாசி Puraṭṭāci Bhādrapada/Prauṣṭhapada mid-September to mid-October
07. ஐப்பசி Aippaci Ashwina/Ashvayuja mid-October to mid-November
08. கார்த்திகை Kārttikai Kārttika mid-November to mid-December
09. மார்கழி Mārkazhi Mārgaṣīrṣa mid-December to mid-January
10. தை Tai Pausha/Taiṣya mid-January to mid-February
11. மாசி Māci Māgha mid-February to mid-March
12. பங்குனி Paṅkuni Phalguna mid-March to mid-April

தமிழ் மாதங்களின் கால அளவு !

             பூமிக்குச் சார்பாகச் சூரியனின் இயக்கம் நீள்வட்டப் பாதையில் அமைந்திருப்பதால் இராசிகளில் சூரியனின் பயணம் ஒரே கால அளவைக் கொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு இராசியையும் சூரியன் கடப்பதற்கு வெவ்வேறு கால அளவு எடுத்துக் கொள்கிறது. இதனால் மாதங்களும் வெவ்வேறு அளவுள்ளவையாக உள்ளன. தமிழ் மாதங்களின் கால அளவுகள் கீழே தரப்பட்டுள்ளன.

- மாதம் இராசி நாள் நாடி விநாடி தற்பரை வசதிக்காக
1 சித்திரை மேடம் 30 55 32 00 31
2 வைகாசி இடபம் 31 24 12 00 31
3 ஆனி மிதுனம் 31 36 38 00 32
4 ஆடி கர்க்கடகம் 31 28 12 00 31
5 ஆவணி சிங்கம் 31 02 10 00 31
6 புரட்டாசி கன்னி 30 27 22 00 31
7 ஐப்பசி துலாம் 29 54 07 00 29/30
8 கார்த்திகை விருச்சிகம் 29 30 24 00 29/30
9 மார்கழி தனு 29 20 53 00 29
10 தை மகரம் 29 27 16 00 29/30
11 மாசி கும்பம் 29 48 24 00 29/30
12 பங்குனி மீனம் 30 20 21 15 31
- மொத்தம் - 365 15 31 15 -


தமிழ் மாதப் அடிப்படை !

தமிழ் மாதங்கள் சூரிய மாதங்களாகும். அதாவது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து பார்க்கும்போது பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றும் சூரியன் அவ்வாறு ஒருமுறை சுற்ற எடுக்கும் காலம் ஒரு ஆண்டாகும். இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு ஒவ்வொன்றும் 30 பாகை(degrees) அளவுள்ள 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் இராசிகள் எனப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் சூரியன் மேற்சொன்ன 12 இராசிகள் வழியாகவும் பயணம் செய்கிறது. பன்னிரண்டு இராசிகளினதும் பெயர்கள் 1. மேடம்(‍மேஷம் )(, 2. இடபம்(ரிஷபம்) , 3. மிதுனம், 4. கர்க்கடகம்(கடகம்), 5. சிங்கம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் என்பனவாகும். ஒரு குறிப்பிட்ட இராசிக்குள் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையான காலமே ஒரு மாதம் ஆகும்.

தமிழ் மாதங்கள்

சூரியன் மேட இராசியில் பயணம் செய்யும்போது நடைபெறும் மாதம் சித்திரையாகும். இவ்வாறே அடுத்தடுத்த ஒவ்வொரு இராசியிலும் சூரியன் பயணம் செய்யும்போது 12 மாதங்களும் ஏற்படுகின்றன. தமிழ் மாதங்களின் பெயர்களும், அந்தந்த மாதங்களில் சூரியன் பயணம் செய்யும் இராசிகளும் கீழே தரப்பட்டுள்ளன.


 

Monday, April 29, 2013

கற்பூரம் ஏற்றுவது ஏன்?

கற்பூரம் ஏற்றுவது ஏன்?
(பயன்படுத்திய நூல்கள்: 1) இந்துமத தத்துவங்களும் சடங்குகளும்- பேராசிரியர் டி.கே. நாராயணன்; 2) இந்து சமயக் களஞ்சியம்—மு.திரவியம், 3) இந்துமதம் பதில் அளிக்கிறது,பகுதி-3, தொகுப்பு எஸ்.லட்சுமி சுப்பிரமண்யம்).
Q) Why do we light camphor in temples? A)The answer is available in English as well.
“தீப மங்கள ஜோதி நமோ நமோ
தூய அம்பல லீலா நமோ நமோ” (திருப்புகழ்)
 “தமசோ மா ஜோதிர் கமய”

(இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச் செல்: பிருஹத் ஆரண்யக உபநிஷத்)
1.ஏன் இறைவனுக்கு கற்பூரம் காட்டுகிறோம்? (கு.அருள் ஜெகன் கேட்ட கேள்வி)
அ) கோவில்களில் கடவுளின் பிரதிமை/ உருவம் உள்ள கர்ப்பக்கிரகம் (கருவறை) இருட்டாக இருக்கும். பழங் காலத்தில் மின் விளக்குகள் கிடையாது.புகை, எண்ணெய் முதலியன பட்டு மூர்த்தியின் உருவம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக பல கோவில்களில் வெளியே தான் விளக்குகள் வைக்கப்பட்டு இருக்கும். கற்பூரமோ நெய் விளக்கோ காட்டும்போது கடவுளின் உருவம் நன்கு தெரியும். அப்போது பட்டர் அல்லது அர்ச்சகர் அந்தக் கோவிலின் , மூர்த்தியின் பெருமையை மனப்பாடமாக ஒப்புவிப்பார். இது புத்தகத்தில் படித்துச் சொல்லும் விஷயம் அல்ல. அவர் கூறுவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செவி வழி மூலம் பெறப்பட்ட அரிய விஷயம். அவ்வாறு ஒருவர் சுவாமியின் மீது வெளிச்சம் போட்டுக் காட்டி, விவரிக்கும்போது நமது முழு கவனமும் அதன் மீது இருக்கும். இவ்வாறு மனம் குவியும்போது நாம் செய்யும் பிரார்த்தனை அப்படியே நிறைவேறும். அப்போது கடவுளைத் தரிசனம் செய்யும் எல்லோரும் ஒரே ‘வேவ் லெந்த்’தில் இருப்பதால் இறையருள் பெறுவது எளிதாகிறது.

Tuesday, April 23, 2013

மா இலை ஏன் மத/சமயம் சம்பந்தமான நிகழ்வுகள்/கொண்டாட்டங்களுக்கு உபயோகிக்கிறோம் ?


இதற்க்கு முக்கிய காரணம் மா இலைகளுக்கு ஒரு சிறப்பு தன்மை உண்டு, மா இலைகள் மரத்தில் இருந்து பறிக்கப் பட்ட பிறகும் கரியமில வாயு (கார்பன் டை ஒக்ஸ்ய்ட்) எடுத்துக் கொண்டு உயிர் வாயு(ஒக்ஜெயின்) தரக்கூடிய ஆற்றல் உடையது, எனவே தான் நம் முன்னோர்கள் மா இலைகளை மக்கள் அதிகமாக ஒன்று கூடும் இடங்களில் பயன்படுத்தினார்கள். மேலும் மா இலைகள் அனைத்து காலங்களிலும் எளிதில் கிடைக்கக் கூடியது.

நம் முன்னோர்கள் அனைத்தையும் அறிவியல் கண்ணோடு பார்த்தார்கள், ஆங்கிலயர்களிடம் நாம் அடிமைப்பட்டு இருந்த காலத்தில் இவைப் போன்ற பல விஷயங்கள் மறைகப்பட்டன, மேலும் நம் முன்னோர்களின் முன்னோர்கள் அனைத்தையும் வேதங்களாக(கோட்பாடுகளாக) நமக்கு தந்திருந்தார்கள், ஆனால் ஒரு சில முன்னோர்களின் அறியாமையோ/சுயலப்திர்க்கோ இவை அனைத்தும் மதங்களின் கோட்பாடுகளாக திரிக்கப்பட்டன.

ஆங்கிலயர்கள் ஒரு படி மேலே சென்று நமக்கு இதனைப் பற்றி அறிவே இல்லாமல் ஆக்க அவர்களின் கல்வி முறையினை கற்று தந்தார்கள், இதில் மிக பெரிய கொடுமை எனனவென்றால் இப்போது நம் பெருமைகளை பற்றி நமக்கு அவர்கள்தான் தந்துக் கொண்டு இருக்கிறார்கள், இந்த நிலைமையை மாற்றி நாம் உலகிற்க்கு தரவில்லையேன்றாலும் நம் அடுத்த தலைமுறைக்காவது தந்து செல்வோம்.

தரவைத் தொகுப்பு(Data Source) :
http://www.mdidea.com/products/herbextract/mangiferin/data03.html
http://hindutradition.blogspot.in/2009/02/why-do-we-use-mango-leaves-thoranam-for.html
http://www.traditionsandbeliefs.com/importance-of-mango-leaves/

Friday, April 5, 2013

தமிழர்கள் கணித மேதைகள் !




தமிழர்கள் கணக்குப் புலிகள். கணித மேதை ராமானுஜத்தை உலக்குக்கு ஈந்தவர்கள் தமிழர்கள். கணிதத்தை அடிப்படையாகக் கொண்ட சதுரங்கத்திலும் (செஸ்) தமிழரான ஆனந்த் விஸ்வநாதன் தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வகித்து வருகிறார். அவரைப் பற்றிய கட்டுரையில் செஸ் விளையாட்டு தோன்றிய அற்புதமான கதையை எழுதியிருக்கிறேன். உலகில் அதிகமான கம்ப்யூட்டர் சாFட்வேர் ஆட்களை அனுப்புவதிலும் நம்மவர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள். தமிழர்கள் கணக்கான பேர்வழிகள்!
மேலும் படிக்க...!