மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் உயிர் சக்தியே குண்டலினி ஆகும்.இந்து மதத்தில் பாம்பு பெரும்பான்மையான இடங்களில் வணங்கப்படுகிறது. கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்களில் “சிலை”ப்படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன் படுத்தப்படுகிறது. ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம்.

நமது உடலில் பிராண
சக்தி எழுபதாயிரம் நாடிகளில் பாய்கிறது.இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு
சக்கரங்களில் இணைகிறது.இவை ஆற்ரல் மையங்கள் என
சொல்லப்படுகின்றது.கீழிருந்து மேலாக
மூலாதாரம்,சுவாதிஷ்டானம்,மணிப்பூரகம்,அனாகதம்,விசுக்தி,ஆக்ஞை,சஹஸ்ரஹாரம்.
சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத் தூண்டப்படுவது இல்லை. பெரும் பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அரைகுறையாய் தூண்டப்பட்டிருப்பதிலேயே வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். வெகுசிலர்தான் நான்கு வரை வருகிறார்கள். ஏழு சக்கரங்களும் தூண்டப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம்.
இந்தக் குண்டலினியின் முக்கிய செயல்பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவது தான். அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல குண்டலி னியை எழுப்பி, சக்கரங்களைத் தூண்டும் போது மனிதனின் அளப்பறியா ஆற்றல் வெளிப்படுகிறது.
அது சரி, இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படி? அதை எழுப்ப மனிதனுக்குக் கிடைத்த அற்புதமான கருவிகள் தான் யோகாவும் தியானமும் ஆகும்.யோகாவை முறையான குருவிடம் கற்று நாமும் குண்டலினி சக்தியை எழுப்பி ஆற்றலை அனுபவிக்கலாம்.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

No comments:
Post a Comment