Monday, April 29, 2013

கற்பூரம் ஏற்றுவது ஏன்?

கற்பூரம் ஏற்றுவது ஏன்?
(பயன்படுத்திய நூல்கள்: 1) இந்துமத தத்துவங்களும் சடங்குகளும்- பேராசிரியர் டி.கே. நாராயணன்; 2) இந்து சமயக் களஞ்சியம்—மு.திரவியம், 3) இந்துமதம் பதில் அளிக்கிறது,பகுதி-3, தொகுப்பு எஸ்.லட்சுமி சுப்பிரமண்யம்).
Q) Why do we light camphor in temples? A)The answer is available in English as well.
“தீப மங்கள ஜோதி நமோ நமோ
தூய அம்பல லீலா நமோ நமோ” (திருப்புகழ்)
 “தமசோ மா ஜோதிர் கமய”

(இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச் செல்: பிருஹத் ஆரண்யக உபநிஷத்)
1.ஏன் இறைவனுக்கு கற்பூரம் காட்டுகிறோம்? (கு.அருள் ஜெகன் கேட்ட கேள்வி)
அ) கோவில்களில் கடவுளின் பிரதிமை/ உருவம் உள்ள கர்ப்பக்கிரகம் (கருவறை) இருட்டாக இருக்கும். பழங் காலத்தில் மின் விளக்குகள் கிடையாது.புகை, எண்ணெய் முதலியன பட்டு மூர்த்தியின் உருவம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக பல கோவில்களில் வெளியே தான் விளக்குகள் வைக்கப்பட்டு இருக்கும். கற்பூரமோ நெய் விளக்கோ காட்டும்போது கடவுளின் உருவம் நன்கு தெரியும். அப்போது பட்டர் அல்லது அர்ச்சகர் அந்தக் கோவிலின் , மூர்த்தியின் பெருமையை மனப்பாடமாக ஒப்புவிப்பார். இது புத்தகத்தில் படித்துச் சொல்லும் விஷயம் அல்ல. அவர் கூறுவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செவி வழி மூலம் பெறப்பட்ட அரிய விஷயம். அவ்வாறு ஒருவர் சுவாமியின் மீது வெளிச்சம் போட்டுக் காட்டி, விவரிக்கும்போது நமது முழு கவனமும் அதன் மீது இருக்கும். இவ்வாறு மனம் குவியும்போது நாம் செய்யும் பிரார்த்தனை அப்படியே நிறைவேறும். அப்போது கடவுளைத் தரிசனம் செய்யும் எல்லோரும் ஒரே ‘வேவ் லெந்த்’தில் இருப்பதால் இறையருள் பெறுவது எளிதாகிறது.

Tuesday, April 23, 2013

மா இலை ஏன் மத/சமயம் சம்பந்தமான நிகழ்வுகள்/கொண்டாட்டங்களுக்கு உபயோகிக்கிறோம் ?


இதற்க்கு முக்கிய காரணம் மா இலைகளுக்கு ஒரு சிறப்பு தன்மை உண்டு, மா இலைகள் மரத்தில் இருந்து பறிக்கப் பட்ட பிறகும் கரியமில வாயு (கார்பன் டை ஒக்ஸ்ய்ட்) எடுத்துக் கொண்டு உயிர் வாயு(ஒக்ஜெயின்) தரக்கூடிய ஆற்றல் உடையது, எனவே தான் நம் முன்னோர்கள் மா இலைகளை மக்கள் அதிகமாக ஒன்று கூடும் இடங்களில் பயன்படுத்தினார்கள். மேலும் மா இலைகள் அனைத்து காலங்களிலும் எளிதில் கிடைக்கக் கூடியது.

நம் முன்னோர்கள் அனைத்தையும் அறிவியல் கண்ணோடு பார்த்தார்கள், ஆங்கிலயர்களிடம் நாம் அடிமைப்பட்டு இருந்த காலத்தில் இவைப் போன்ற பல விஷயங்கள் மறைகப்பட்டன, மேலும் நம் முன்னோர்களின் முன்னோர்கள் அனைத்தையும் வேதங்களாக(கோட்பாடுகளாக) நமக்கு தந்திருந்தார்கள், ஆனால் ஒரு சில முன்னோர்களின் அறியாமையோ/சுயலப்திர்க்கோ இவை அனைத்தும் மதங்களின் கோட்பாடுகளாக திரிக்கப்பட்டன.

ஆங்கிலயர்கள் ஒரு படி மேலே சென்று நமக்கு இதனைப் பற்றி அறிவே இல்லாமல் ஆக்க அவர்களின் கல்வி முறையினை கற்று தந்தார்கள், இதில் மிக பெரிய கொடுமை எனனவென்றால் இப்போது நம் பெருமைகளை பற்றி நமக்கு அவர்கள்தான் தந்துக் கொண்டு இருக்கிறார்கள், இந்த நிலைமையை மாற்றி நாம் உலகிற்க்கு தரவில்லையேன்றாலும் நம் அடுத்த தலைமுறைக்காவது தந்து செல்வோம்.

தரவைத் தொகுப்பு(Data Source) :
http://www.mdidea.com/products/herbextract/mangiferin/data03.html
http://hindutradition.blogspot.in/2009/02/why-do-we-use-mango-leaves-thoranam-for.html
http://www.traditionsandbeliefs.com/importance-of-mango-leaves/

Friday, April 5, 2013

தமிழர்கள் கணித மேதைகள் !




தமிழர்கள் கணக்குப் புலிகள். கணித மேதை ராமானுஜத்தை உலக்குக்கு ஈந்தவர்கள் தமிழர்கள். கணிதத்தை அடிப்படையாகக் கொண்ட சதுரங்கத்திலும் (செஸ்) தமிழரான ஆனந்த் விஸ்வநாதன் தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வகித்து வருகிறார். அவரைப் பற்றிய கட்டுரையில் செஸ் விளையாட்டு தோன்றிய அற்புதமான கதையை எழுதியிருக்கிறேன். உலகில் அதிகமான கம்ப்யூட்டர் சாFட்வேர் ஆட்களை அனுப்புவதிலும் நம்மவர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள். தமிழர்கள் கணக்கான பேர்வழிகள்!
மேலும் படிக்க...!


அதிசயிக்க வைக்கும் கர்ம பலன் ரகசியம்!

கர்மங்களில் தான் எத்தனை ரகங்கள்!
 கர்மங்களில் தான் எத்தனை ரகங்கள்! கத்தி கையில் கீறியவுடன் வெளிப்படுகிறது ரத்தம். சில கர்மங்கள் உடனடி பலனைத் தருபவை.
இரவிலே கொண்டைக்கடலையை ஈரத் துணியில் முடிந்து வைத்தால் காலையில் அவை முளை விடுகின்றன. சில கர்மங்கள் சில மணி நேரம் கழித்துப் பலனைத் தருகிறது.

ஒரு ஆலமரத்து விதையை ஓரிடத்தில் விதைத்தால் அது முழு மரமாகிப் பலன் தர பல்லாண்டுகள் ஆகின்றன, சில கர்மங்கள் ஆலமர விதையைப் போன்றவை. அடுத்த ஜென்மத்தில் பலனைத் தருபவை.

இப்படி ஒவ்வொரு நிமிடமும் கர்மங்களை விதைத்துக் கொண்டே சென்றால் அவற்றின் பலன்கள் நமக்கு நல்லவையாகவும் தீயவையாகவும் வந்து கொண்டே தானே இருக்கும்.

  மேலும் படிக்க...!