Monday, May 20, 2013

ரோஹிணி! நட்சத்திர அதிசயங்கள் - பகுதி 2



நட்சத்திர அதிசயங்கள்
 சிவ புராணம் கூறும் ரோஹிணியின் கதையைப் பார்த்தோம்.மஹாபாரதம் கூறும் கதையின் விளக்கத்தைப் பார்ப்போம்!
நிலவைக் கவர்ந்த ரோஹிணி! – 2
ச.நாகராஜன்

மஹாபாரதக் கதையின் உட்பொருள் :

வானத்தின் சுழற்சி கடிகார முள் இடமிருந்து வலமாகச் சுழலுவது போன்ற சுழற்சி!க்ளாக்வைஸ் சுழற்சி என்று சாதாரணமாக இதைக் கூறுகிறோம்.இடைவிடாது சுழலும் வானச் சுழற்சியில் மாறாத நட்சத்திரமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தை அடையாளமாக வைத்துக் கொண்டே வானத்தின் திசையைக் கணிக்க வேண்டியதாக இருக்கிறது.ஆனால் இந்த துருவ நட்சத்திரம் கூட  சுழற்சியில் மிக மிகச் சிறிய அளவில் இடம் பெயர்கிறது.

துருவ நட்சத்திரத்தை முதலில் பார்த்த அதே இடத்தில் பார்க்க சரியாக 25710 ஆண்டுகள் ஆகிறது, (கணித சௌகரியத்திற்காக 26000 ஆண்டுகள் எனக் கொள்வோம்)செலஸ்டியல் ஈக்வேஷன் எனப்படும் வானத்து ரேகை ஒவ்வொரு நட்சத்திரத்தின் வழியாகவும் ஒவ்வொரு கால கட்டத்தில் போகும்.கி.மு 2700ல் இந்த வானத்து ரேகை ரோஹிணியின் வழியே சென்றது.இந்தக் கால கட்டத்தில் தான் நட்சத்திரங்களை ஒரு புதிய அமைப்பின் கீழ் கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.ஆகவே படைப்பு உந்துதல் உண்டான ப்ரஜாபதி ரோஹிணியை ‘பழைய இடத்திற்குச் செல்ல’ வைத்தார்.பல காலம் களை இழந்திருந்த ரோஹிணி வெட்கத்தால் சிவந்து புதிய பொலிவுடன் கவர்ச்சியுடன் போனாள்.மஹாபாரதம் கூறும் கதையின் உட்பொருள் வானியல் ரீதியாக இது தான்!


ரோஹிணி! நட்சத்திர அதிசயங்கள் - பகுதி 1


 


                                         Aldebaran= star Rohini
நட்சத்திர அதிசயங்கள்:

வானில் உள்ள மர்மங்களைப் புரிந்து கொள்ள சிவ புராணத்தைப் படிக்க வேண்டும். நட்சத்திரத் தோற்றம், அவற்றின் இயல்புகள் மற்றும் மர்மங்களை அற்புதமாக விளக்குகிறது சிவ புராணம். நிலவைக் கவர்ந்த நிலவின் காதலி ரோஹிணியைப் பற்றிப் பார்ப்போம்

நிலவைக் கவர்ந்த ரோஹிணி! – Part 1

By ச.நாகராஜன் Santanam Nagarajan

சிவ புராணம் கூறும் ரோஹிணியின் கதை:

வானில் உள்ள மர்மங்களைப் புரிந்து கொள்ள சிவ புராணத்தைப் படிக்க வேண்டும். நட்சத்திரத் தோற்றம், அவற்றின் இயல்புகள் மற்றும் படைப்பு மர்மங்களை அற்புதமாக விளக்குகிறது சிவ புராணம்.
தட்சன் தனது புத்திரிகள் 27 பேரை சந்திரனுக்கு மணம் செய்து வைத்தான். சந்திரன் ரோஹிணியின் பால் தீராத காதல் கொண்டான்.மற்ற இருபத்தி ஆறுபேரையும் புறக்கணித்து ரோஹிணியை மட்டும் பிரியாமல் எப்போதும் அவள் கூடவே இருந்தான்.இதனால் மனம் வருந்திய இருபத்தி ஆறு பேரும் தங்கள் தந்தையான தட்ச ப்ராஜாபதியிடம் சென்று முறையிட்டனர்.தட்சனுக்கு எல்லையற்ற கோபம் உண்டானது. அவன் சந்திரனை அழைத்துக் கடுமையாக எச்சரித்தான். ஆனால் சந்திரனோ அந்த எச்சரிக்கையை சட்டை செய்யவில்லை. தீராத மையலில் ரோஹிணியுடன் கூடவே இருந்தான்.இரண்டு முறை எச்சரித்தும் பயனில்லை.

பொம்பளை சிரிச்சா, உதைச்சா, பார்த்தா போச்சு !


பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு என்பது தமிழ் பழமொழி. ஆனால் பெண்கள் சிரித்தால் செண்பக மரம் பூக்கும் என்கிறது வடமொழி. பெண்களைப் போல் மரங்களுக்கும் மசக்கை (தோஹத) உண்டாம். பெண்களின் அன்புக்காக அவை ஏங்குமாம். தமிழர்களும் வேங்கை மரத்தை பெண்களின் திருமணத்தோடு இணைத்துப் பேசுவர். சங்க இலக்கிய நூல்கள் வேங்கை பரத்தின் அடியில் பெண்கள் புலி புலி என்று குரலிடுவதையும் அதனால் அது பூப்பதையும் குறிப்பால் உணர்த்தும்.

பெண்கள் எத்தனை வகை?

பெண்களை வடமொழி வித்தகர்கள் நாலு வகையாகவும், பரத சாஸ்திர அறிஞர் பரத ரிஷி எட்டு வகையாகவும் தமிழர்கள் வயதின் அடிப்படையில் ஏழு வகையாகவும், ஜப்பானியர்கள் ஒன்பது வகையாகவும், ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் டி.என்.ஏ. அடிப்படையில் ஏழு வகையாகவும் பிரித்தனர்.

பத்மினி, சங்கினி,ஹஸ்தினி, சித்ரினி

பத்மினி பெண்களைப் பார்ப்பது அபூர்வம். அவர்கள் மிகவும் அழகானவர்கள், மென்மையானவர்கள்,புனிதமானவர்கள். முகம் வட்ட வடிவம் உடையது. உடலும் உருண்டு திரண்டு இருக்கும். அவர்கள் சுஹாசினி (மலர்ந்த முகம்) சுபாஷினி ( இனிய சொல்), சாருஹாசினி (புன்சிரிப்புடையோர்) ஆவர். அழகிய கவர்ச்சிகரமான பார்வையால் எதிரிகளையும் தேவர்களையும் வசப்படுத்துவர்.

மேலும் படிக்க....

Sunday, May 19, 2013

எந்த வேலையைத் தேர்ந்தெடுப்பது? எந்த படிப்பு படிப்பது ?

 
       
                              
                                              ச.நாகராஜன்

  எந்தத் துறையைத் தேர்ந்தெப்பது, எந்த வேலையைச் செய்ய வேண்டும் என்ற கேள்வி இன்றைய இளைஞர்கள் அனைவருக்கும் எழும் ஒரு கேள்வி. இதற்குப் பண்டைய கவிஞர் தரும் விடை பொருள் பொதிந்த ஒன்று.
யத்கர்ம குர்வதோஸ்ய ஸ்யாத்பரிதோஷோந்தராத்மன: I
தத் ப்ரயத்னேன குர்வித விபரீதம் து வர்ஜயேத் II

(யத் – எந்த கர்ம – வேலை விபரீதம் – விபரீதமானதை
வர்ஜயேத் – தவிர்த்தல் வேண்டும்)
எந்த வேலையானது சந்தோஷத்தைத் தருமோ அதை மட்டுமே செய்ய வேண்டும்.அதற்கு மாறாக உள்ள எதையும் தவிர்த்து விட வேண்டும்.
ஆக மனதிற்குப் பிடித்த படிப்பைத் தேர்ந்தெடுத்து அதில் தேறி அந்தத் துறையில் வேலையில் சேர்ந்து அதில் முன்னேற வேண்டும்.இதுவே கவிஞர் தரும் அறிவுரை.
சரி, எப்படிப்பட்ட பணம் நம்மிடம் நிலைக்கும்? இந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்கிறது:
அக்ருத்வா பரசந்தாபமகத்வா கலமந்திரம் I
அயாசித்வா பரம் கச்சித் யத் ஸ்வல்பமபி தத்பஹு II
(ஸ்வல்பம் – குறைவாக; தத் பஹு – அதுவே அதிகம்)

மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல்
ஒரு ரௌடியின் வீட்டிற்கும் செல்லாமல்
யாரிடமும் பிச்சை எடுக்காமல்
சொல்பமாகக் கிடைத்தாலும் கூட எனக்கு எது கிடைக்கிறதோ
அதுவே எனக்கு அதிகம்.

அற வழியில் மற்றவர்களைக் கொள்ளை அடிக்காமல், கீழான ஒருவனின் தயவுமின்றி, லஞ்சம் கொடுக்காமல். எனக்குப் பிடித்த வேலையைச் சந்தோஷமாகச் செய்யும் போது எனக்கு எந்த வருவாய்  கிடைக்கிறதோ அதுவே எனக்குப் போதும் !
இந்த மனப்பான்மை தொன்றுதொட்டு இந்த நாட்டில் இருந்து வந்திருக்கிறது. ஆகவே கிராமங்களில் வாழ்ந்து வந்தவர்கள் கூட மனத் திருப்தியுடன் நன்கு வாழ்ந்து வந்தனர்.
என்று ஆங்கிலேயன் வகுத்த ஆபீஸும் அதில் ‘குமாஸ்தா; உத்தியோகமும் வந்ததோ அன்றிலிருந்து கல்வி முறையானது உத்தியோகம் சார்ந்ததாக ஆகி அதற்கான டிகிரிகளை அச்சிட்டுத் தரும்
ஒரு வழிமுறையாகி விட்டது!
சரி.  

இந்தக் கல்வி முறையை ஒரே நாளில் நம்மால் மாற்ற முடியாவிட்டாலும் கூட , நமக்குப் பிடித்த துறையையாவது தேர்ந்தெடுத்து முன்னேறலாம் இல்லையா! சிந்திப்போம், செயல்படுவோம்!!

Friday, May 3, 2013

தமிழ் மாதங்களும் அதற்க்கு இணையான ஆங்கில(கிராகோரியன்) மாதங்களும் !

No. தமிழ் மாதங்கள் Month (English) Sanskrit Name * Gregorian Calendar equivalent




01. சித்திரை Cittirai Chaitra mid-April to mid-May
02. வைகாசி Vaikāci Vaisākha mid-May to mid-June
03. ஆனி Āni Jyaishtha mid-June to mid-July
04. ஆடி Āṭi Āshāḍha mid-July to mid-August
05. ஆவணி Āvaṇi Shrāvaṇa mid-August to mid-September
06. புரட்டாசி Puraṭṭāci Bhādrapada/Prauṣṭhapada mid-September to mid-October
07. ஐப்பசி Aippaci Ashwina/Ashvayuja mid-October to mid-November
08. கார்த்திகை Kārttikai Kārttika mid-November to mid-December
09. மார்கழி Mārkazhi Mārgaṣīrṣa mid-December to mid-January
10. தை Tai Pausha/Taiṣya mid-January to mid-February
11. மாசி Māci Māgha mid-February to mid-March
12. பங்குனி Paṅkuni Phalguna mid-March to mid-April

தமிழ் மாதங்களின் கால அளவு !

             பூமிக்குச் சார்பாகச் சூரியனின் இயக்கம் நீள்வட்டப் பாதையில் அமைந்திருப்பதால் இராசிகளில் சூரியனின் பயணம் ஒரே கால அளவைக் கொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு இராசியையும் சூரியன் கடப்பதற்கு வெவ்வேறு கால அளவு எடுத்துக் கொள்கிறது. இதனால் மாதங்களும் வெவ்வேறு அளவுள்ளவையாக உள்ளன. தமிழ் மாதங்களின் கால அளவுகள் கீழே தரப்பட்டுள்ளன.

- மாதம் இராசி நாள் நாடி விநாடி தற்பரை வசதிக்காக
1 சித்திரை மேடம் 30 55 32 00 31
2 வைகாசி இடபம் 31 24 12 00 31
3 ஆனி மிதுனம் 31 36 38 00 32
4 ஆடி கர்க்கடகம் 31 28 12 00 31
5 ஆவணி சிங்கம் 31 02 10 00 31
6 புரட்டாசி கன்னி 30 27 22 00 31
7 ஐப்பசி துலாம் 29 54 07 00 29/30
8 கார்த்திகை விருச்சிகம் 29 30 24 00 29/30
9 மார்கழி தனு 29 20 53 00 29
10 தை மகரம் 29 27 16 00 29/30
11 மாசி கும்பம் 29 48 24 00 29/30
12 பங்குனி மீனம் 30 20 21 15 31
- மொத்தம் - 365 15 31 15 -


தமிழ் மாதப் அடிப்படை !

தமிழ் மாதங்கள் சூரிய மாதங்களாகும். அதாவது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து பார்க்கும்போது பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றும் சூரியன் அவ்வாறு ஒருமுறை சுற்ற எடுக்கும் காலம் ஒரு ஆண்டாகும். இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு ஒவ்வொன்றும் 30 பாகை(degrees) அளவுள்ள 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் இராசிகள் எனப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் சூரியன் மேற்சொன்ன 12 இராசிகள் வழியாகவும் பயணம் செய்கிறது. பன்னிரண்டு இராசிகளினதும் பெயர்கள் 1. மேடம்(‍மேஷம் )(, 2. இடபம்(ரிஷபம்) , 3. மிதுனம், 4. கர்க்கடகம்(கடகம்), 5. சிங்கம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் என்பனவாகும். ஒரு குறிப்பிட்ட இராசிக்குள் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையான காலமே ஒரு மாதம் ஆகும்.

தமிழ் மாதங்கள்

சூரியன் மேட இராசியில் பயணம் செய்யும்போது நடைபெறும் மாதம் சித்திரையாகும். இவ்வாறே அடுத்தடுத்த ஒவ்வொரு இராசியிலும் சூரியன் பயணம் செய்யும்போது 12 மாதங்களும் ஏற்படுகின்றன. தமிழ் மாதங்களின் பெயர்களும், அந்தந்த மாதங்களில் சூரியன் பயணம் செய்யும் இராசிகளும் கீழே தரப்பட்டுள்ளன.