Tuesday, September 19, 2017

புரட்டாசி மாசம் ஏன் கறி திண்பது கூடாது !!!

_*புரட்டாசி மாசம் ஏன் கறி திண்பது கூடாது, ஆன்மீகமும் அறிவியலும் கலந்த உண்மை.*_

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, விரதம் இருந்து சனிக்கிழமைகளில் பெருமாள் ஆலயங்களுக்கு செல்வது வழக்கம். இதற்கு என்ன காரணம் என்பதை பற்றி பார்க்கலாம்.

ஜோதிடத்தில் 6வது ராசி கன்னி.கன்னியா ராசியின் மாதம் புரட்டாசி. இந்த மாதத்தின் அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம்.
புதன் சைவத்திற்குறிய கிரகம் ஆதாலல் அசைவம் சாப்பிடக்கூடாது பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது.

புரட்டாசி மாதம் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும் மேலும் பூமியின் இயக்கத்து படி நமக்கு செரிமானக்குறைவும், வயிறு பிரச்சினைகளும் ஏற்பட்டு கெட்டக்கொழுப்பு உடலில் தங்கிவிடும் ஆதலால் அசைவ உணவை தவிர்த்து, உடம்புக்கும், வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்கச் சொன்னார்கள்.

 மாதங்களில் புரட்டாசி என்பது வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. பல மாதங்களாக, வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து, புரட்டாசி மாதத்தில்தான் வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.
இதனால், அந்த மாதத்தை சூட்டை கிளப்பிவிடும் காலம் எனக் கூறுவார்கள்.

இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை ஒதுக்கினர் நம் முன்னோர். அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.

துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர். பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தம் தருவதையும் நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். சாதாரணமாக சைவ உணவு நமது உடலிற்கு எல்லா வகையிலும் உகந்தது. இந்த மாதிரியான காலங்களில் அசைவ உணவுகளைத் தவிர்த்தால் நமக்கு நல்லது.

புரட்டாசி மாதம் என்பது புதனுடைய வீட்டில் சூரியன் இருக்கக்கூடியது. புதன் என்பது ஒரு சாத்வீகமான கிரகம். செளமியன் என்று புதனைக் குறிப்பிடுவது உண்டு. செளமியன் என்றால் சாது. சாத்வீகமானவர், அதிர்ந்து கூட பேசமாட்டார் என்று சொல்வார்களே, அதுபோல.
புதனுடைய உணவு என்று எடுத்துக்கொண்டால், அது உப்பு சப்பு இல்லாத உணவுதான். துவர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளெல்லாம் புதனுடைய உணவு. இந்த புதனுடைய உணவாக அசைவ உணவுகள் வரவே வராது. காய், கனிகள், பிரசாதங்கள் இதுபோன்ற உணவுகளெல்லாம்தான் புதனுக்கு வரும். அதனால்தான் அந்த மாதத்தில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுகிறது.

Tuesday, August 15, 2017

மரத்தின் ௮டியில் கடவுளின் அடையாளம் இ௫ப்பது ஏன்?


காற்றோட்டம் பெற .....
மரங்களுக்கிடையில் ....
நடந்துசென்றேன் .....
மரங்கள் என்னோடு ....
பேசத்தொடங்கின .....!!!

வேப்பமரம் ....!
ஏய் இனியவரே .....
எனக்கு கீழ் ஒரு அம்மன் ....
உருவத்தை வைத்துவிட்டு ....
செல் என்றது - திகைத்தேன் ....
நான் என்ன ஞானியா ...?
மந்திர வாதியா ....?
சிலையை உடன் வரவழைக்க ....?

அரசமரம் .....!
ஏய் இனியவரே ....
எனக்கு கீழ் ஒரு பிள்ளையார் ....
சிலையொன்றை வைத்துவிட்டு ...
செல் என்றது - புன்னகைத்துவிட்டு ....
மேலும் சென்றேன் .....!!!

ஆலமரம் .....!
ஏய் இனியவரே ....
எனக்கு கீழ் ஒரு பைரவர் ...
சூலத்தை வைத்துவிட்டு ...
செல் என்றது - ஒரு பெரு மூச்சை ...
ஆழமாக எடுத்துவிட்டு சென்றேன் ....

அடுத்த மரம் என்னிடம் .....
எதையும் கேட்கவில்லை .....
வியப்படைந்தேன் - ஏய் மரமே ....
உனக்கு கடவுள் நம்பிக்கை ....
இல்லையா ...? ஏன் எதையும் ....
கேட்கவில்லை என்று நான் ...
வினாவினேன் .....!!!

போங்க இனியவரே ....
அவைகளெல்லாம் ஞானத்தால் ....
சிலைகளை கேட்கவில்லை ....
தம்மை வெட்டி  விட கூடாது ...
என்ற பயத்தால் கேட்கிறார்கள் ....
அப்படியென்றாலும் தம்மை ....
வெட்டும் அளவு குறையுமே ....
அற்ப ஆசை தான் இனியவரே .....!!!

அப்போ உன் நிலை ....?
என்னை விலைபேசி விட்டார்கள் ....
இன்று நான் இறக்கபோகிறேன் ....
எதையும் நான் கேட்டு பயனில்லை .....
முடிந்தால் இனியவரே ....
அவர்களை காப்பாற்றுங்கள் ....
அவர்கள் விரும்பியதை செய்யுங்கள் ...!!!

இப்போதுதான் புரிந்தது .....
மூதாதையர் மூடநம்பிக்கையால் ....
சிலைகளை வைக்கவில்லை ....
தூய காற்று தரும் மரங்களை ....
பாதுகாக்கவே சிலைகளை ...
வைத்தார்கள் - அன்றைய கருவி ....
அன்றைய விழிப்புணர்வு இவைகளே ....!

இன்றைய நவீன உலகில் வாழும் ...
மேதாவிகள் இதனை மூடநம்பிக்கை ....
அறிவிலிகள் என்கிறார்கள் ....!!!

Tuesday, August 16, 2016

குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும் ??

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை. அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!

சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?

குளியல் = குளிர்வித்தல்

குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது.

மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.

இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும்.

காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.

வெந்நீரில் குளிக்க கூடாது.

எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.

குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.

நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.

எதற்கு இப்படி. காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.

நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.

இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருங்கள்.

குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நினையும். வெப்பம் கீழ் இருந்து மேல் எழுப்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.

இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??

உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.

இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.

எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.
வியக்கவைக்கிறதா... !

நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.

அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% சத்தமான பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்துக்கொள்ளும்.

பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.

புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.

குளியலில் இத்தனை விடையங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஸ்சேம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.

குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்

குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.

குளித்தல் = குளிர்வித்தல்

குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.

இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.

நலம் நம் கையில்

 

நன்றி - பொய்யா மொழிகள்

அரைஞாண் கயிற்றின் என்ன மருத்துவ ரகசியம்!. !!!!!

அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு.

எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால்,திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க..

உண்மையிலேயே இதுக்கு தான்இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?

நிச்சயமாக இல்லை அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது

அந்த ரகசியம்......

ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது.

ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது.

பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது.
இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது. 


உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன.

இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.

இப்போது வெள்ளி,தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விசயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத்தான் செய்கிறார்கள்.

நம் முன்னோர்கள் பாரம்பரியத்தை நம் பிள்ளைகளுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்..


நன்றி - பொய்யா மொழிகள்

இடி இடிக்கும் போது #அர்ஜுனா_அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா?



>>நம் ஊரில் மழை பெய்யும் போது இடி இடித்தால் போதும். அர்ஜுனா...அர்ஜுனா என்பார்கள் பெரியவர்கள்.

>>உடனே, நம் வீட்டு இளசுகள், நீ அர்ஜுனான்னு சொன்னவுடனே, அவன் வில்லையும் அம்பையும் எடுத்துகிட்டு வந்து, இடி சத்தமே இல்லாம பண்ணிட போறானாக்கும் என்று கேலி செய்வார்கள்.

>>இடிதாங்கி கண்டுபுடிச்சு எத்தனையோ வருஷமாகியும், அதை பில்டிங் மேலே வைக்காம இன்னமும் அர்ஜுனான்னு புலம்பிகிட்டு இருக்கியே! என்று இடியிலிருந்து தப்பும் அறிவியல் உபகரணம் பற்றியும் எடுத்துச் சொல்வார்கள்.

>>உண்மையில், உண்மையான அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

>>இடி பலமாக இடிக்கும் போது, சிலரது காது அடைத்து ஙொய்ங் என்று சத்தம் வரும்.

>>இதிலிருந்து தப்ப அர்ஜுனா என்றால் போதும். காது அடைக்காது.
#அர் என்று சொல்லும் போது, நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும்.

#ஜு என்னும் போது வாய் குவிந்து காற்று வெளியேறும்.

#னா என்னும் போது, வாய் முழுமையாகத் திறந்து காற்று வெளியே போகும்.

>>இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது.

>>அதற்குத்தான் அர்ஜுனா வை நம்மவர்கள் துணைக்கு அழைத்தார்கள்.

>>அர்ஜுனன் கிருஷ்ண பக்தன் என்பதால், அவன் பெயரை உச்சரிப்பது மனதுக்கு பலம் என்ற ஆன்மிக காரணத்துடன், காது அடைத்து விடக்கூடாது என்ற அறிவியல் காரணமும் இதில் புதைந்து கிடக்கிறது


நன்றி - பொய்யா மொழி

பூனை குறுக்கே போனால் என்ன !!! ?????

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும்.

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.

பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது.

பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.

இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..?

பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்...!

தமிழர்கள் பாம்பிற்குப் பால் ஊற்றுவது மற்றும் முட்டை வைப்பதன் காரணம் என்ன..?

ஆதி தமிழர்கள் பாம்பிற்குப் பால் ஊற்றுவது மற்றும் முட்டை வைப்பதன் காரணம் என்ன..?

உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.

பின்னர் எதற்குப் புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்..?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக பாம்புகள் இருந்தன. காரணம் அடர்ந்த காடுகள் மத்தியில் மனித நடமாட்டம் மிகமிகக் குறைவு. மனிதனை விடப் பாம்புகள் அதிகம் காணப்பட்டது .

ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை. அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள். ஆகவே அதனைக் கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும்.அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வரும்.

பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையைக் கட்டுப்படுத்தும் வேலையைப் பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது . ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள்.

அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

பலரை சென்றடைய தயவுசெய்து பகிருங்கள் உறவுகளே.

குளங்களிலும் நீர்நிலைகளிலுல் நாம் காசுகளைப் போடுவது ஏன்??????

பொதுவாக, குளங்களிலும் நீர்நிலைகளிலுல் நாம் காசுகளைப் (நாணயங்களை) போடுவோம். இப்பழக்கம் தொன்று தொட்டே நம்மிடம் இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று கேட்டால், அவ்வாறு செய்வதால் ஆகூழ் (அதிர்ஷ்டம்) வந்து சேரும் என்று கூறுவார்கள்.

உண்மையில் இதன் பின்னால் ஓர் அறிவியல் கூறு மறைந்திருக்கிறது. இப்பொழுது, துருப்பிடிக்கா எஃகால் செய்யப்படும் காசுகள் போல் அல்லாமல், முற்காலத்தில் காசுகள் செம்புகளால் தான் செய்யப்பட்டன. செம்பு நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒரு கனிமம் ஆகும். செம்பு தாது குறைபாடால் மூட்டுவலி, மாரடைப்பு என்று பல கோளாறுகள் ஏற்படும். எனவே, நம் முன்னோர்கள் செம்பு காசுகளை குளங்களில் போட்டனர். செம்புக் காசுகளில் இருக்கும் செம்பு அணுக்கள் நீருடன் கலக்கும், அதைக் குடிக்கும் மக்கள் உடலுக்கும் செம்பு தாது சேரும். முற்காலத்தில் குளத்து நீர்தான் ஊர்மக்கள் எல்லாருக்கும் குடிநீராகப் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே பழக்கம் நாளடைவில் பொருளிழந்து தற்பொழுது நாமும் துருப்பிடிக்கா எஃகால் ஆன காசுகளைக் குளங்களில் போடுகிறோம்.

பின்னர், கனிமநீரை (mineral water) வாங்கி அருந்துகிறோம்.

செம்பு குடங்களில் நீரைப் வைத்து அருந்துவது சிறப்பு. செம்பு நீர், புற்றுநோயைத் தவிர்க்கும் பண்புடையதாக அறிவியல் உலகம் கூறுகிறது.

எலுமிச்சை பழம் நுழைவு வழிகளில் கட்டுவது சரியா அல்லது தவறா ????

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...???


இந்த செய்தி பல பேருக்கு தெரிந்திருக்கும்..!!
தெரியாதோர்க்காகஇந்தப் பதிவு...


சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது.

காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால்...சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.

ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தபட்டது...!!


சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது.

காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால்...சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.

ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தபட்டது...!!


தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது.

இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது.

விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது.

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம். ஆனால் இப்போது டைனிங் டேபிள்.

இது சரியா..? தவறா..?

முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன..?

என்பதைத் தெரிந்துக் கொள்வோம்:-

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது.

காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால்...சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.

ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தபட்டது...!!

Monday, February 2, 2015

மரணமடைந்தவுடன் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டுவது எதற்காக ?

அமானுஷ்ய உண்மை !!!
                 மரணமடைந்தவுடன், அந்த உடலை வடக்கு தெற்காக வைப்பது ?, கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டுவது போன்ற சடங்குகளை எதற்காகச் செய்கிறார்கள்? காது மூக்கில் பஞ்சு வைத்து, வாய் மூடி கட்டுவது எதற்காகச் செய்கிறார்கள்?
 

 இறப்பு நேர்கிற நொடியில் இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன்பிருந்தே ஒரு மனிதன்
பயனுள்ள வகையில் இறந்து போவதற்கு என்னென்ன செய்யலாம் என்று இந்தக் கலாசாரத்தில் பல வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒருவருக்கு மரணம் நெருங்குகிற வினாடியில், அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித சுலபத்துடன் மரணம் நிகழ வேண்டுமென்பதற்காக, அந்த மனிதரை வீட்டுக்கு வெளியே கொண்டுபோய், வடக்கு தெற்காக உடலைக் கிடத்துவார்கள். ஏனெனில், ஒரு கட்டடத்துக்குள் இருக்கிறபோது அவ்வளவு சுலபமாக உயிர் பிரியாது. தலை வடக்கு நோக்கி வைக்கப்படும்போ
து காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர் உடலைவிட்டு எளிதாகப் பிரியும். மரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும் அகன்றுவிடுவதில்லை. எனவே, அந்த உயிர்
உடலை சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஆனால், உடல் வடக்கு தெற்காக வைக்கப்பட்டு உயிர் பிரியும்போது அந்த உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, அந்த உடலைச்
சுற்றிக்கொண்டு இருப்பது பயன் தராது என்று அந்த உயிருக்குத் தெரிந்துவிடுகிறது. மற்ற சூழ்நிலைகளில் உயிரானது தொடர்ந்து உடலுக்குள் நுழைய முயற்சிக்கும். இந்தப் போராட்டம் அந்த இடத்தில் ஒருவிதமான சக்தியை ஏற்படுத்தும். இது இறந்துபோன மனிதருக்கும் நல்லதல்ல, வாழ்கிறவர்களுக்கும் நல்லதல்ல. இன்னொரு முக்கிய சடங்கு, இறந்த மனிதரின் இரண்டு கால் கட்டை விரல்களும் ஒன்றாகக் கட்டப்படுவது. பொதுவாகவே மரணம் நிகழ்கிறபோது கால்கள் அகலமாகத் திறந்துகொள்கின்றன. அந்த நிலையில் பின்புறத் துவாரம் திறந்திருக்கும். எனவே பிரிந்து போன உயிர் அந்த மூலாதாரம்
வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த உயிருக்கும் அந்தச் சூழலுக்கும் நல்லதல்ல. எனவே, கால் கட்டை விரல்களைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூடப்படுகிறது. யோகக்  கிரியைகள் செய்வதற்காக நீங்கள் கால்கட்டை விரல்களை ஒன்று சேர்க்கும்போது பின்புறத் துவாரம் இயல்பாகவே மூடிக்கொள்ளும். இதையேதான் இறந்தவர்களுக்கும் செய்கிறார்கள். எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த உயிரின் முயற்சி இப்போது பலிக்காது.மூலாதாரம் திறந்திருக்கிறபோது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில ஆவிகளும் முயலக்கூடும்.
காது, மூக்கில் பஞ்சு வைத்து, வாய் மூடி கட்டுவதும் இதற்காகத்தான். மாந்திரீகப் பயிற்சி மேற்கொள்பவர்களும் அந்த உடலைப் பயன்படுத்தக்கூடும். அப்படி அந்த உடல் வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டால், அது பிரிந்து சென்ற ஆன்மாவைப் பலவிதங்களில் துன்புறுத்துவதாக இருக்கும். அதனால்தான் ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரின் கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டப்படுகின்றன!

Urimam: Sitharak Kural

Tuesday, January 20, 2015

சுபகாரியங்களில் வெற்றிலை பாக்கு பழம் கொடுப்பது ஏன்?

                   ஒரு முறை ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை தரிசிக்க ஒரு மாணவன் வந்திருந்தான். அவனிடம் பெரியவர் "என்ன படிக்கிறாய்?" என்றார். அவன் தாவரவியல் படிப்பதாகக் கூறினான். சுவாமிகள் தன் முன் வைத்திருந்த பழம் பாக்கு வெற்றிலைத் தட்டில் இருந்த வெற்றிலையைக் காட்டி "அதன் பெயர் என்ன?" என்று வினவினார். மாணவனும் 'வெற்றிலை' என்றான். "அதற்கு ஏன் வெற்றிலை என்று பெயர் வந்தது?" என்று சுவாமிகள் கேட்க மாணவன் சொல்லத் தெரியாமல் திகைத்தான். சுவாமிகள் கூறினார் "எல்லாக் கொடிகளும் பூவிடும், காய் காய்க்கும். ஆனால் வெற்றிலைக் கொடி பூக்ககாது, காய்க்காது. உண்ணக்கூடிய வெறும் இலை மட்டும் தான் விடும். அதனால் அது வெற்று இலை ஆயிற்று' என்றார்.

             இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு வெற்றிலையில்
எல்லா வைட்டமின்களும் இருக்கிறது. வெற்றிலையில் இரும்பு, சுண்ணாம்பு, பி.கரோட்டின், அஸ்கார்பிக் அமிலம், லைகோபின், டோட்டல் பினால்ஸ், டோட்டல் ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆக்டிவிட்டி போன்ற 'டங்க் ட்விஸ்டர்கள்' இருக்கிறது. வெற்றிலை பாக்குடன் சுன்னாம்பு சேர்த்து சாப்பிட்டால் நீண்ட நேரம்  நல்ல எனர்ஜி இருக்கும். வயிறு செரிமானத்திற்கு பெரிதும் உதவும். சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக  வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. வாயுத் தொல்லை நீங்கும்.
வெற்றிலையுடன் சுன்னாம்பு சேர்த்து சாப்பிடுவதால் கால்ஷியம் உடலில் சேரும்.  வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக்  குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.  தலை வலித்தால் பலர் வெற்றிலையை கிள்ளி தலையில் ஒட்டிக்கொள்வதை பார்த்திருப்போம்.  வெற்றிலைச் சாறும் சீரகமும் வயிற்று வலிக்கு நல்லது. சளி இருமல் போன்றவற்றிர்கு வெற்றிலையுடன்
சுக்கு கஷாயம் குடிப்பார்கள். வெற்றிலையையும் மிளகையும்  சேர்த்து தின்றால் தேள் விஷம் கூட முறியும் என்பார்கள். 
          வெற்றிலை பாக்கு சுன்னாம்புக்  கலவை ஆண்மையின் உந்துதலுக்கு நல்லது. கணவனுக்கு மனைவி வெற்றிலை மடித்து கொடுத்து சந்தோஷப்படுத்து வது ஏன் என்று இப்போது புரிந்திருக்கும். அதனால் தான் சிறு வயது பிள்ளைகள் வெற்றிலை போட்டால் மாடு முட்டும் என்று பயமுறுத்துவார்கள். வாழைப்பழமும் வெற்றிலையும் ஆண்மைக்கு நல்ல தென்பதாலேயே கல்யாணம் மற்றும் சுபகாரியங்களுக்கும் ஒருவருக்கொருவர்  வெற்றிலைபாக்கு பழம் கொடுத்து பரிமாரிக்கொள்கிறார்கள். குறிப்பாக  பெண்கள் வீட்டிற்கு வரும் பிற பெண்களுக்கு வழியனுப்பும்போத  ு வெற்றிலை பாக்கு பழம்  வைத்து கொடுத்து வழியனுப்புகிறார்கள். அதாவது இதனால் எனக்கு கிடைத்த இன்பத்தை நீயும் உன் வீட்டில் அனுபவி என்பது பெண்களுக்குள்ளான சிம்பாலிக் 'கோட் வேர்ட்'. 
ஏனெனில் கணவன் மனைவி உறவு எந்தளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறதோ அந்தளவிற்கு குடும்பம்பலப்படும். அதனால் வெற்றிலை பாக்கு பழம் இல்லாத சுபகாரியங்களும் நற்காரிய  பரிமாற்றங்களும் நம் சமூகத்தில் பார்க்கவே முடியாது. நமக்கு குடும்பமே கோவில் அல்லவா! அந்த காலத்து ராஜாக்களெல்லாம் இப்படி பக்குவமாக  வெற்றிலையை மடித்து கொடுப்பதர்கே சம்பளத்திற்கு ஆள் வைத்திருந்தார்களாம். சம்பளத்தில்  வெற்றிலையும் அடங்கும்! பெண்கள் கர்பமாக இருக்கும் போதும்,  குழந்தை பெற்ற பின்பும் வயிற்றின் செரிமான சுழற்ச்சி மாறுபடும். அதனை சீர்செய்ய  வெற்றிலை பயன்படும். அதனால் பெண்கள் கர்பமாக இருக்கும்பொழுதும் சரி, குழந்தைப்  பிறந்து தாய்ப்பால் குடுக்கும் நேரங்களிலும் சரி, வெற்றிலைப் போடுவது வழக்கம்.

 உரிமம்: சித்தர்களின் குரல்.

Tuesday, December 2, 2014

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும்ம்ம் ???


இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்..!
ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.
சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.
இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும். அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள்.
இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம்.அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோர்ந்து விடும். அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும்.
இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச்சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார்கள். நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது அவர்கள் கொள்கை.

Saturday, October 25, 2014

அறிவையும், அழகையும் அதிகரிக்கும் வெண்டைக்காய் !


பரீட்சை காலமாக இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வெண்டைக்காயை வதக்கி சாப்பிடக் கொடுப்பார்கள். மூளை சுறுசுறுப்பாய் செயல்பட வெண்டைக்காய் உதவி புரியும் என்பதே இதற்குக் காரணம், இதில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவிதமான தாவர பசைப்பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மாறும் மாவுச்சத்தும் வெண்டைக்காயில் உள்ளன.

வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர், ஹைபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ். இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவிலுள்ள பல மாநிலங்களிலும் இன்னும் சில நாடுகளிலும் வெண்டைக்காய் விதையை காபிப் பொடியாகப் பயன்படுத்துகிறார்க்ள.

கொழுப்பை கரைக்கும்

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.

கொழ கொழ காய்

வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.

வாய்நாற்றம் அகலும்

வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.

ஆண்மையை அதிகரிக்கும்

வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும்.

சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

நன்மை தரும் பாக்டீரியா

இதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. தயிரில் உள்ளதைப்போல இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. இதில் வைட்டமின் பி காணப்படுகிறது. வெண்டைக்காயை குழந்தைகளுக்கு வதக்கி உணவில் சேர்த்து தரலாம்.

வெண்டைக்காயில் உயர்தர லேக்ஸடிவ் (laxative.) உள்ளது. இது உடல் நலனுக்கு ஏற்றது. அல்சரை கட்டுப்படுத்துகிறது. வாய்வு கோளாறுகளை தடுக்கிறது. வெண்டைக்காயை நன்றாக வேக வைத்து அந்த தண்ணீரை கூந்தலில் தடவி வர கூந்தல் உதிர்தலை தடுக்கும்.

இது குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மினுமினுப்பான தோலையும் பெறலாம். சுறுசுறுப்பாகவும் வாழலாம்.

Urimam: Tamil.boldsky.com

உணவுகளை செரிக்கும் பீட்ரூட் !


உணவுகளை செரிக்கும் பீட்ரூட்!

சமையலில் ருசியையும்,உணவுகளுக்கு கவர்ச்சியான தோற்றத்தையும் தருவதுடன், அனைத்து உறுப்புகளையும் சீராக இயங்க செய்வதற்கு பீட்ரூட் பெரும் பங்கு வகிக்கிறது. நாம் உண்ணும் கிழங்குகளில் பீட்ரூட்டின் பங்கு இன்றியமையாதது. பீட்டா வல்காரிஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட கீனோபோடியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த கிழங்குச்செடிகள் உணவுக்காக பயிரிடப்படுகின்றன. பீட்ரூட்டில் அடங்கியுள்ள சத்துக்கள்: கிழங்கு மற்றும் இலைகளில் மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், போரான், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், பீட்டைன், வைட்டமின் சி மற்றும் ஏராளமான வைட்டமின்களும், கனிமங்களும் காணப்படுகின்றன. இதிலுள்ள பீட்டைன் என்னும் ஆல்கலாய்டு இருதயத்தை பாதுகாப்பதுடன், போலிக் அமிலம், ஏ வைட்டமின், பி வைட்டமின்கள் மற்றும் புரொஜஸ்டிரோன் என்னும் ஹார்மோனின் செயல்பாட்டிற்கும் பெருமளவு உதவுகின்றன.

ரத்த சர்க்கரையை குறைக்கும்: பீட்ரூட்டிலுள்ள நைட்ரேட், நைட்ரிக் ஆக்சைடாக மாற்றமடைந்து, மென்மையான சதைப்பகுதிகளை சுருங்கி, விரியச் செய்கின்றன. இதனால் ரத்த ஓட்டம் சீராகிறது. பீட்ரூட்டிற்கு இனிப்பு சுவை இருந்த போதிலும் இதன் இலை மற்றும் கிழங்கு சாறானது ரத்த சர்க்கரையளவை குறைக்கின்றன. கல்லீரலின் கொழுப்பை கரைக்கின்றன. இலை மற்றும் கிழங்குகள், சிறுநீரை நன்கு பெருக்கி, இதய வீக்கத்தை குறைக்கின்றன. பீட்ரூட்டிலிருந்து சாயம் தயாரிக்கப்பட்டு, பலவிதமான உணவுப் பொருட்களும் நிறமேற்றப்படுகின்றன. கிழங்குகளைவிட இதன் இலைகள் ஏராளமான மருத்துவக் குணங்களை கொண்டுள்ளன.

செரிமானம் கூடும்: செரிமான கோளாறுகளை நீக்கி, உணவுப்பாதையில் தோன்றிய அழுகல் மற்றும் கழிவுகளை நீக்கும் தன்மை பீட்ரூட்டுக்கு உண்டு. பூண்டு உட்கொள்ளும் பொழுது ஏற்படும் வாய் நாற்றத்தை நீக்கவும் பீட்ரூட் துண்டுகளை வாயில் போட்டு மென்று வரலாம். சாலட், பொரியல், ஜாம், ஊறுகாய், சூப் என பலவகைகளில் உட்கொள்ளப்படுகிறது.

ரத்த சிவப்பணுக்கள்: பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பலி வலி நீங்கும். பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் பூசிவர புண் ஆறும். பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும். பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும். வாரம் ஒருமுறை பீட்ரூட் சூப் குடித்து வர ரத்த ஓட்டம் சீராகும்; சிறுநீர் நன்கு பெருகும்; ரத்த சோகையினால் பெண்களுக்கு தோன்றும் மாதவிலக்கு தடை நீங்கும். கல்லீரல் பித்தப்பையில் தோன்றும் கற்கள் மற்றும் மண்ணீரல் வீக்கம் நீங்கும். நாம் அடிக்கடி சமையலில் பயன்படுத்தும் காரட், முள்ளங்கி, பீட்ரூட், நூல்கோல், வெந்தயம், சீரகம், ஓமம், வெங்காயம், பூண்டு போன்றவற்றின் கீரைப் பகுதிகளையும் உணவில் சூப் அல்லது அரைத்த விழுதாக சேர்த்து பயன்படுத்தலாம். ஏனெனில் கிழங்குகளில் இல்லாத சில உயிர்சத்துக்களும், கனிமங்களும், அத்தியாவசிய உப்புகளும், நார்சத்துகளும் இந்த கீரைகளில் பெருமளவு உள்ளன.

தேங்காய் பால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!






தேங்காய் பால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

1) நீரிழிவு தடுக்கிறது.
2) சருமம் மற்றும் இரத்தக் குழாய்களை நெகிழ்வுத் தன்மையுடன் வைத்திருக்கும்
3) எலும்புகளை உறுதியாக வைக்க உதவி புரியும் (பாஸ்பரஸ் நிறைந்துள்ளது.)
4) இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கும்
5) தசைகளையும் நரம்புகளையும் ரிலாஸாகச் செய்யும்.
6) உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்
7) கீல்வாதத்தின் இடர்பாட்டை குறைக்கும்
8) இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்த உதவும்
9) உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பை நிலைநிறுத்த உதவும்
10) புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

Urimam: Tamil.boldsky.com

முட்டைகோஸ் சாப்பிடுவதால் ஏற்படும் 10 நன்மைகள்!!!



முட்டைகோஸ் சாப்பிடுவதால் ஏற்படும் 10 நன்மைகள்!!!

பச்சை இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உண்மையில் முட்டைகோஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் முட்டைகோஸில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அவை வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை. இவை அனைத்திலும் நல்ல அளவில் சத்துக்கள் அடங்கியுள்ளன. அதுவும் பல்வேறு பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்றவை. இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். குறிப்பாக முட்டைகோஸை சாப்பிடும் போது, அதனை அளவுக்கு அதிகமாக வேக வைத்து சாப்பிட கூடாது. இல்லாவிட்டால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். எனவே எப்போது இதனை சாப்பிட்டாலும் அளவாக வேக வைத்து சாப்பிடுவது நல்லது. சொல்லப்போனால், அதனை பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது. சரி, இப்போது முட்டைகோஸ் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

1) புற்றுநோயை எதிர்த்துப் போராடும்
2) அல்சரை குணப்படுத்தும்,
3) உடலில் அழற்சி அல்லது உட்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் குணப்படுத்தும்,
4) வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுதும்,
5) கண்புரையை தடுக்கிறது.
6) உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கம்,
7) மூளையில் ஏற்படும் பிளேக்கை குறைக்கும்.(சிவப்பு நிற முட்டைகோஸ்)
8) மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்.
9) சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
10) தசைகளில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து சிறந்த நிவாரணம் தரும்.

தாவரத் தங்கம் - காரட்


பொன்நகை அணிபவர்களின் உடல் அந்த நகையோடு சேர்ந்து பளபளப்பாக மின்னுவதைப்போல தினம் ஒரு காரட் உண்பவர்களின் உடலும் தகதக வென மின்னும். இதனாலேயே தாவரத் தங்கம் என்ற அடைமொழியோடு காரட் அழைக்கப்படுகிறது. காரட்டில் அடங்கியுள்ள சத்துக்கள் கண்ணுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் காரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருளும் உள்ளது. புற்று நோய் செல்களை அழிக்கும் நாம் உண்ணும் உணவில் வேறு எந்த காய் கனிக்கும் இல்லாத சிறப்பு காரட்டிற்கு மட்டுமே உள்ளது. இதில் உள்ள கரோட்டின் என்கின்ற உயரிய சத்து புற்று நோய் செல்களை கட்டுப்படுத்துகிறது. காரட்டில் பீட்டா கரோட்டின் என்கின்ற சத்து நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த பீட்டா கரோட்டினில் உள்ள சிறப்பு அணுக்கள்தான் புற்று நோய்க்கு எதிரியாக இருந்து செயல்படுகின்றது. கண்பார்வை குறைபாட்டினை போக்கும் வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் ஏற்படும் மாலைக்கண் நோய் உள்ளவர்கள் தினமும் காரட்டினை சாப்பிட்டால் அவர்களுக்கு மாலைக்கண்நோய் எளிதில் குணமடைவதாக கண்டறியப்பட்டுள்ளது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் சக்தி காரட்டிற்கு உள்ளதால் இதயம் தொடர்புடைய நோய்களை அண்டவே விடாது. வாரத்தில் இரண்டு நாட்களாவது நமது சமையலில் காரட்டினை பயன்படுத்துவது உடம்பிற்கு நல்லது. ஏனெனில் காரட்டில் உள்ள நார்ச் சத்து மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்தியை தருகின்றது. பக்கவாதத்தை அண்டவிடாது காரட்டினை பச்சையாகவே நிறைய சாப்பிடலாம். தினமும் காரட்டினை உண்பவர்களை ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத நோய் எட்டிப்பார்ப்பதில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் மூளையை சுறு சுறுப்பாக வைக்க உதவுகிறது. பற்களில் கரை உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக காரட்டினை மென்று சாப்பிட்டால் பற்களின் கரைகள் போய்விடும். தாங்க முடியாத பசியையும் ஒரே ஒரு காரட் போக்கிவிடும் அல்சரை குணப்படுத்தும் பீட்டா கரோட்டின் என்ற சத்து வயிறு தொடர்பான அனைத்த நோய்களையும் குணப்படுத்துகின்ற சக்தி கொண்டது. அல்சர் நோய் உள்ளவர்கள், வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் காரட் ஜூஸ் சாப்பிட்டால் வயிறு மற்றும் குடல் தொடர்புடைய நோய்கள் குணம் அடைவதுடன் மறுபடியும் இதுபோன்ற பாதிப்புகள் மீண்டும் எட்டிப்பார்க்காமல் செய்துவிடும். வயிற்றுக் கோளாறு காரணமாக ஒரு சிலருக்கு வாயில் துர்நாற்றம் ஏற்படுவதுண்டு. அவர்களுக்கு காரட் சிறந்த மருந்தாகும். வாரத்திற்கு 5 நாட்கள் காரட்டை நன்கு அரைத்து ஜூஸ் எடுத்து அதனுடன் எதுவும் கலக்காமல் பருகி வர வாய் நாற்றம் ஓடியே போய் விடும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் சக்தி கரோட்டினாய்டுகளுக்கு உண்டு. எனவே நீரிழிவு நோயளிகள் காரட்டினை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இன்சுலின் சுரப்பு சீரடையும்.

Thursday, July 3, 2014

உடலெனும் பிரபஞ்சம் ... பிரபஞ்சம் !!!

               ம் பூதங்களின் மொத்த உருவே பிரபஞ்சம். இதுபோல் மனித உடலும் ஐம் பூதங்களால் ஆன சிறிய பிரபஞ்சம் என்கிறார்கள் சித்தர்கள். இதைத்தான் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர்.

கடந்த இதழில் கோள்களின் செயல்பாடுகள் மனித உடலில் எந்தெந்த உறுப்புகளுடன் தொடர்புடையவை என்பதைப் பற்றி அறிந்தோம்.

இந்த பஞ்ச பூதங்கள் எவ்வாறு மனித உடலை தீர்மானிக்கின்றன, அவற்றின் செயல்பாடுகள் என்ன என்பதை விரிவாக அறிந்துகொள்வோம்.

மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்ச பூதங்கள்.

இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவானது தான் மனித உடல் எனும் பிரபஞ்சம்.

                                        நிகழ்ந்த சீர்ப் பிருதிவியும் அப்பு நானும்

                                        நேரான தேயுவோடு வாயுமாகும்

                                        அகழ்ந்தவா காயத்தோ டைந்து பூதம்

                                        அரிதான பிருதிவியு மண்ணு மாகும்

                                        தகழ்ந்தவப்பு சலமாகும் நெருப்பாற் தேயு

                                        தாக்கான வாயுவது காற்றுமாகும்

                                        இகழ்ந்தவா காயமது சத்தமாகும்

                                        ஏற்றபிரு திவியும் பொன்னிறமதாமே

                                        யூகி வைத்திய சிந்தாமணி


மண்ணின் கூறுகள்

மண்ணை பிருத்திவி என்று அழைக்கின்றனர். எலும்பு, தோல், நரம்பு, தசை, மயிர் இவை அனைத்தும் மனித உடம்பின் மண் கூறு கொண்டவை.

பிருத்திவியில் பிருத்திவி அதாவது மண்ணில் மண் சேர்ந்ததால் உருவானதுதான் எலும்பு என்றும், மண்ணுடன் நீர் சேர்ந்து உருவானது தசை என்றும், மண்ணுடன் நெருப்பு சேர்ந்து உருவானது தோல் என்றும், மண்ணுடன் வாயு சேர்ந்து உருவானது நரம்பு என்றும், மண்ணுடன் ஆகாயம் சேர்ந்து உருவானது மயிர் என்றும் குறிப்பிடுகின்றனர்.

நீரின் கூறு (புனலின் கூறு)

நீரின் தன்மை கொண்டவை இரத்தம், விந்து (வெந்நீர்), சிறுநீர், மூளை, கொழுப்பு. நீரினை புனல் என்று அழைக்கின்றனர். நீருடன் நீர் சேர்ந்து வெளியேறுவது சிறுநீர் என்றும், நீருடன் மண் (பிருத்திவி) சேர்ந்து உருவானதுதான் உமிழ்நீர் என்றும், நீருடன் நெருப்பு சேர்ந்துதான் வியர்வையானது எனவும், நீருடன் வாயு சேர்ந்துதான் இரத்தம் (குருதி, செந்நீர்) உண்டானது எனவும், நீரின் கூறுடன் ஆகாயம் சேர்வதால் உருவானதுதான் சுக்கிலம் எனப்படும் விந்து எனவும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நெருப்பின் கூறு

உணவு, தூக்கம், அச்சம், சேர்க்கை, சோம்பல் முதலியவை நெருப்பின் கூறாகும். நெருப்பை தேயு (தீ) என அழைக்கின்றனர்.

நெருப்பு கூறுடன் நெருப்பு சேரும்போது தூக்கம் ஏற்படுகிறது எனவும், நெருப்புடன் மண் சேரும் போது பசி உருவாகிறது எனவும், நெருப்புடன் நீர் சேரும்போது தாகம் ஏற்படுகிறது எனவும், நெருப்புடன் வாயு சேரும்போது அச்சம், சோம்பல் உருவாகிறது எனவும், நெருப்புடன் ஆகாயம் சேரும்போது ஆசை, சேர்க்கை உருவாகிறது எனவும் குறிப்பிடுகின்றனர்.

வளியின் (காற்று) கூறு

ஓடல், நடத்தல், நிற்றல், உட்காருதல், படுத்தல்.

வாயுவுடன் வாயு சேரும்போது ஓடுதல் நடைபெறும் என்றும், வாயுவின் கூறுடன் மண் (பிருத்திவி) சேரும்போது படுத்தல் எனவும், வாயுடன் நீர் சேரும்போது நடத்தல் நடைபெறும் என்றும், வாயுவுடன் நெருப்பு இணையும்போது உட்காருதல் நிகழும் என்றும் வாயுவுடன் ஆகாயம் சேரும்போது தாண்டுதல், குதித்தல் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

விண்ணின் (ஆகாயம்) கூறு

இன்பம் (காமம்), உட்பகை (குரோதம்), ஈயாமை (உலோபம்), பெருவேட்கை (மோகம்), கொழுப்பு (மதம்)

விண்ணின் தன்மையுடன் ஆகாயம் சேரும்போது மோகம் உண்டாவதாகவும், ஆகாயத்துடன் மண் சேரும்போது இராகம் உருவாவதாகவும், ஆகாயத்துடன் நீர் சேரும்போது துவேசம் ஏற்படுவதாகவும், ஆகாயத்துடன் நெருப்பு இணையும்போது பயம் உருவாவதாகவும், ஆகாயத்துடன் வாயு சேரும்போது நாணம் ஏற்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

மனித உடலில் ஐம்பூதங்களின் செயல்பாடுகளை சித்தர்கள் இவ்வாறு விளக்கியுள்ளனர்.

மண்ணின் தன்மையால் மயிர் வளர்கிறது. எலும்பு வலுவடைகிறது. நரம்புகள் அதிக வேகத்துடன் செயல்படுகின்றன. தசைகள் இறுக்கம் கொள்கின்றன.

இவ்வாறு பஞ்ச பூதங்களின் செயல்பாடுகளால் தான் மனித உடல் உருக்கொண்டுள்ளதாக சித்தர்கள் கூறுகின்றனர்.

இதே கருத்தையே ஆன்மீகம் தெரிவிக்கிறது. சைவ சமயத்தில் பஞ்ச பூதங்களுக்கும் கோவில்கள் அமைத்துள்ளனர்.

                                  காஞ்சிபுரம்                             மண் (பிருத்திவி)

                                  திருவாணைக்கால்                   நீர்

                                  திருவண்ணாமலை                  நெருப்பு

                                  காளஹஸ்தி                             காற்று

                                  சிதம்பரம்                                ஆகாயம்.

பஞ்ச பூதங்களையே தெய்வ வடிவமாக வணங்கி வரச் செய்துள்ளனர்.

மேலும் மனித உடலின் ஐம்பொறிகள் அதாவது ஞானேந்திரியங்கள் என அழைக்கப்படும் மெய், வாய், கண், மூக்கு, செவி பற்றியும்,

ஐந்து நுண்ணிய தன்மைகளாக சுவை, ஒலி, ஓசை, நாற்றம், ஊது பற்றியும் வரும் இதழ்களில் விரிவாகக் காண்போம்.

  உரிமம் : நக்கீரன்

பாட்டியின் பத்து மாதப் சூத்திரம் ???

ஒரு பொண்ணு எப்ப ஒரு கொழந்தைக்கி தாயாகுறாளோ.. அப்பத்தான் அவ முழுமை அடையிறா.. அதுனால இதுதான் உன் வாழ்க்கையின் முக்கியமான தருணம். அதுனால கவனமா இருக்கனும்...”                                               
                                        


“தாய் உண்ணும் உணவும், எண்ணும் எண்ணமும்தான் சேய்க்கு சேருங்கிறது அனுபவப் பாடம். அதனால நல்ல எண்ணங்கள வளத்துக்க... முடிஞ்ச வரை மனச் சஞ்சலத்துக்கு எடங்கொடுக்காத... சாப்பாட்டுல பழங்களையும் கீரை களையும் காய்களையும் நெரையா சேத்துக்க... 5 மாசம் வரைக்கும் கடுமையான வேலை எதையும் செய்யாத... அதுக்குப் பொறவு சின்னச்சின்ன வீட்டு வேலைகளைச் செய்யலாம். வேலையே செய்யாம படுத்திருக்குறதும் தப்பு.... ஓய்வொழிச்சல் இல்லாம வேலை செய்யிறதும் தப்பு... 5 மாசம் வரைக்கும் ஒம் வீட்டுக்காரன கொஞ்சம் ஒதுங்கியே இருக்கச் சொல்லு... நீண்ட தூரப் பயணம் போகவே போகாத... கூட்ட நெரிசலானஎடங்களுக்கும் போகாத. அமைதியும் சந்தோஷமும் ரொம்ப முக்கியம். ஒனக்கு எது சந்தோஷமான விஷயமோ அதைச் செஞ்சுக்கிட்டுரு... நல்ல புத்தகங்களைப் படிக்கலாம்... இனிமையான பாட்டுகளக் கேக்கலாம்...”

“இந்த மாதிரி நேரத்துல அம்மா வீட்டுலதான் தன் விருப்பத்துக்கு இருக்க முடியும். அதுனாலதான் புள்ளத்தாச்சி புள்ளையளெ, அம்மா வீட்டுக்கு அனுப்பி வைக்கிறது பழக்கம்.... கொழந்தங்கிறது நம்ம வாழ்க்கையோட அடுத்தக்கட்ட அடையாளம். அது ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி... அத ஆரோக்கியமானதா பெத்தெடுக்க வேண்டியது நம்மோட கடமை... இப்போதைக்கு வேற எதையும் நீ மனசுல போட்டுக்குறப்புடாது... கொழந்தை ஒன்னுதான் ஒம்மனசுல நிக்கணும்...”

“அப்புறம்... கொழந்த வளர வளர.. வயிறு பெரிசாகும். அப்போ மூச்சுத் தெணறுற மாதிரி இருக்கும்.. அப்பப்ப கால்ல நீர் கோத்து வீங்கிக்கும்... நெஞ்சு படபடக்குறமாதிரி இருக்கும்... அடிக்கடி மலச்சிக்கல் வரும்.. இப்ப மருந்து சொல்றேன் கேட்டுக்க....”

“அதிமதுரம், நற்சீரகம், ஜடமாஞ்சில், பட்டை நீக்கிய வில்வ வேர், வட்டச் சாரணை வேர், காய்ந்த முடக்கற்றான், சித்தரத்தை, நிழல்ல காயவச்ச குருந்தட்டி இது எல்லாத்துலயும் வகைக்கு 5 கிராம் எடுத்து ரெண்டு கொவள தண்ணி ஊத்தி நல்லா கொதிக்க வையி.. அது வத்தி ஒரு கொவளையா வந்ததும் ஒரு கொவள எளனி தண்ணிய ஊத்தி மறுபடியும் கொஞ்சம் கொதிக்க ஆரம்பிச்சதும் எறக்கி மூடி ஆறவையி...”

“நல்லா ஆறினதும் வடிகட்டி 5 வது மாசத்திலருந்து 7வது மாசம் வரைக்கும் ஒருநா விட்டு ஒரு நா காலைல 11 மணி லேர்ந்து 12 மணிக்குள்ள இல்லன்னா... சாயந்தரம் 4 மணிலேர்ந்து 6 மணிக்குள்ள சாப்பிடு.. 7வது மாசத்திலேர்ந்து கொழந்த பொறக்குற வரைக்கும் தெனமும் ஒரு வேளை குடி... மருந்து கசக்குமோன்னு பயந்துடாதடியம்மா.. இனிப்பாத்தான் இருக்கும்...“

“நாஞ் சொன்ன மாதிரி மருந்து சாப்பிட்டு வந்தின்னா.. கொழந்தைக்கும் எந்தவிதமான நோயும் வராது... பிரசவமும் சுகப்பிரசவமா இருக்கும்...”

  உரிமம் : நக்கீரன்