
உண்மையில் இதன் பின்னால் ஓர் அறிவியல் கூறு மறைந்திருக்கிறது. இப்பொழுது, துருப்பிடிக்கா எஃகால் செய்யப்படும் காசுகள் போல் அல்லாமல், முற்காலத்தில் காசுகள் செம்புகளால் தான் செய்யப்பட்டன. செம்பு நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒரு கனிமம் ஆகும். செம்பு தாது குறைபாடால் மூட்டுவலி, மாரடைப்பு என்று பல கோளாறுகள் ஏற்படும். எனவே, நம் முன்னோர்கள் செம்பு காசுகளை குளங்களில் போட்டனர். செம்புக் காசுகளில் இருக்கும் செம்பு அணுக்கள் நீருடன் கலக்கும், அதைக் குடிக்கும் மக்கள் உடலுக்கும் செம்பு தாது சேரும். முற்காலத்தில் குளத்து நீர்தான் ஊர்மக்கள் எல்லாருக்கும் குடிநீராகப் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே பழக்கம் நாளடைவில் பொருளிழந்து தற்பொழுது நாமும் துருப்பிடிக்கா எஃகால் ஆன காசுகளைக் குளங்களில் போடுகிறோம்.
பின்னர், கனிமநீரை (mineral water) வாங்கி அருந்துகிறோம்.
செம்பு குடங்களில் நீரைப் வைத்து அருந்துவது சிறப்பு. செம்பு நீர், புற்றுநோயைத் தவிர்க்கும் பண்புடையதாக அறிவியல் உலகம் கூறுகிறது.
No comments:
Post a Comment