Saturday, March 30, 2013

அனைத்தும் பெற ஆறு கேள்விகள் !



ச.நாகராஜன்
   வாழ்க்கையில் வெற்றி பெறவும் ஒரு திட்டத்தில் வெற்றி பெறவும் ஒரு பொருள் அல்லது இடம் அல்லது நிறுவனம் அல்லது ஒரு தனி நபர் பற்றி மதிப்பீடு செய்ய SWOT analysis என்ற உத்தியை நிபுணர்கள் இன்றைய நவீன உலகில் கடைப்பிடிக்கின்றனர். SWOT  என்றால்  Strengths, Weaknesses, Opportunities,Threats என்று அர்த்தம். பலம், பலஹீனம், வாய்ப்புகள், எதிர் வரும் அபாயங்கள் ஆகிய நான்கை நன்கு அலசி ஆராய்ந்தால் வெற்றி நிச்சயம் என்கிறது ஆல்பர்ட் ஹம்ப்ரி என்பவர் கண்டுபிடித்த ஸ்வாட் அனாலிஸிஸ்.

Read More...

Saturday, March 2, 2013

மறுபிறப்பு உண்மையா? பகுதி 4



                மெய்ஞானமும் விஞ்ஞானமும் கூறும் புனர்ஜென்ம உண்மைகள்! – 4
                    (அறிவியல்,ஆன்மீக நோக்கில் மறுபிறப்பு இரகசியங்கள்!)
                                                                                          Written By S Nagarajan

காந்திஜி , இயன் ஸ்டீவன்ஸன் ஆராய்ந்த சாந்தி தேவி மர்மம்!
1926ம் ஆண்டு டெல்லியில் பிறந்த குழந்தையான சாந்தி தேவி தனக்கு நான்கு வயதாக இருக்கும் போது தனது பெற்றோர் மதுராவில் இருப்பதாகவும் அங்கு செல்ல விரும்புவதாகவும் கூறியது. ஆனால் சாந்தி தேவியின் இந்தப் பேச்சை அவளது பெற்றோர் சட்டை செய்யவில்லை.ஆறு வயதான போது அவள் மதுராவிற்குச் செல்ல விரும்பி வீட்டை விட்டு ஓட முயன்றாள். அவளது ஆசிரியரிடமும் பள்ளித் தலைமையாசிரியரிடம் தான் குழந்தை பெற்றெடுத்த பத்தாம் நாளன்று இறந்ததாகவும் தனது உறவினர் அனைவரும் மதுராவில் இருப்பதாகவும் மீண்டும் மீண்டும் அவள் கூறினாள்.இதனால் வியப்படைந்த அவர்கள் உன் கணவன் பெயர் என்ன என்று கேட்டவுடன் கேதார்நாத் என்று உடனே பதிலளித்தாள்.

மேலும் படிக்க  

மறுபிறப்பு உண்மையா ?- பகுதி 3





                         Picture is taken from another website.Thanks.
This article is the third part on Rebirth written by S NAGARAJAN
புனர்ஜென்ம உண்மைகள்! – 3
(அறிவியல், ஆன்மீக நோக்கில மறுபிறப்பு இரகசியங்கள்!)

தேவியின் பாதஸ்மரணை தரும் பலன்!
பதினெட்டு புராணங்களும் அத்தோடு பதினெட்டு உப புராணங்களும் தரும் புனர்ஜென்மக் கதைகள் மற்றும் சம்பவங்கள் சுவாரஸ்யமானவை.
எடுத்துக்காட்டாக தேவி பாகவதம் பதினொன்றாம் ஸ்கந்தம் பதினெட்டாம் அத்தியாயத்தில் விவரிக்கும் பிரக்த்ரதன் கதையைச் சொல்லலாம்.

மேலும் படிக்க  

மறுபிறப்பு உண்மையா ?- பகுதி 2








                   The picture is taken from another Hindu website. Thanks.

புனர் ஜென்ம உண்மைகள்! – 2
(அறிவியல், ஆன்மீக நோக்கில் மறுபிறப்பு இரகசியங்கள்!)
எழுதியவர் எஸ். நாகராஜன்
25 லட்சம் வார்த்தைகளில் ஒரு அற்புத இதிஹாஸம்!
ஒரு லட்சம் சுலோகங்களில் சுமார் இருபத்தைந்து லட்சம் பொருள் பொதிந்த வார்த்தைகளைக் கொண்டு உலகின் தலையாய பெரிய இலக்கியமாகத் திகழும் மஹாபாரதம் மறுபிறப்பு பற்றிய அனைத்து உண்மைகளையும் விரிவாகவும் அழகாகவும் கூறும் பெரிய
இதிஹாஸமாகும்.

மேலும் படிக்க