Monday, December 30, 2013

நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள் !



நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்! ''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும், இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’ இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது’ நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை. உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது. நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம். எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு’ என்றார் மறைந்த பசுமை நாயகன் நம்மாழ்வார். - விகடன்

Monday, December 23, 2013

கடலோரக் காதலன்!

கடலோரக் காதலன்!



பௌர்ணமி நிலவில் , பனி விழும் இரவில் !
கடலோரக் கரையினில், நடந்து நான் செல்லுகையில் !
அலையின் நுரை என்னை வந்து தீண்டியது !
ஆனந்தத்தில் என் விழி சிந்திய நீரை, தென்றல் துடைத்துச்  சென்றப் போது !
ஆனந்தமே ஆனந்தமே, பரமானந்தமே !



- இவன் -

அருள் செகன் குணசீலன் 

Friday, December 20, 2013

நவீன தமிழ் அருஞ்சொற்பொருள் - பகுதி 2 !

B - வரிசை

BABCHI SEEDS - கற்பகரிசி கற்பூரவரிசி
BACKBITING - புறங்கூறல்
BACTERIA - குச்சியம்/குச்சியங்கள்
BACKGAMMON - சொக்கட்டான்
BACKWATER - உப்பங்கழி, காயல், கடற்கழி
BACKYARD - புறங்கடை, புழக்கடை, கொல்லை
BACON - உப்புக்கண்டம்
BADMINTON BALL - பூப்பந்து
BADGE - வில்லை
BAKER - வெதுப்பகர்
BAKERY - அடுமனை, வெதுப்பகம்
BAIT - இரை
BALANCE SHEET - ஐந்தொகை
BALCONY - மேல்மாடம், மேன்மாடம், உப்பரிகை
BALL - பந்து
BALL BADMINTON- பூப்பந்தாட்டம்
BALL BEARING - மணித்தாங்கி
BALL-POINT PEN - (பந்து)முனை எழுதுகோல்
BALOON - வளிக்கூண்டு, வாயுக்கூண்டு, புகைக்கூண்டு
BANDAGE - கட்டு
BANK (MONEY) - வைப்பகம்
BANK (RIVER) - ஆற்றங்கறை
BANNER - பதாகை
BANYAN TREE - ஆலமரம்
BAR (DRINKS) - அருந்தகம்
BAR CODE - பட்டைக் குறியிடு
BARBER - நாவிதன்
BARBADOS CHERRY - சீமைநெல்லி
BARGAIN - பேரம் பேசு
BARIUM - பாரவியம்
BARK (TREE) - மரப்பட்டை
BARLEY - வால்கோதுமை
BARRACUDA - சீலா மீன்
BARRISTER - வழக்குரைஞர்
BASE PAY - தேக்கநிலை ஊதியம்
BASEBALL - அடிப்பந்தாட்டம்
BAT (ANIMAL) - வவ்வால்
BAT (SPORT) - மட்டை
BATALLION - பட்டாளம்
BATH-TUB - குளியல் தொட்டி
BATTLE-FIELD - போர்க்களம், செருக்களம்
BATSMAN (CRICKET) - மட்டையாளர்
BATTER (BASEBALL) - மட்டையாளர்
BAY - விரிகுடா
BEAM - உத்திரம்
BEAVER - நீரெலி
BEE'S WAX - தேன்மெழுகு
BEER - தோப்பி
BEETROOT - செங்கிழங்கு
BELLY-WORM - நாங்கூழ், நாங்குழு
BELT (WAIST) - இடுப்பு வார்
BERRY - சதைக்கனி
BERYLIUM - வெளிரியம்
BIBLE - வேதாகமம்
BICEPS BRANCHII MUSCLE - இருதலைப்புயத்தசை
BICEPS FEMORIS MUSCLE - இருதலைத்தொடைத்தசை
BICEPS MUSCLE - இருதலைத் தசை
BICYCLE - மிதிவண்டி,
BILBERRY - அவுரிநெல்லி
BILE - பித்தம்
BILL - விலைப்பட்டியல்
BILLIARDS - (ஆங்கிலக்) கோல்மேசை
BILLION - நிகற்புதம்
BINOCULAR - இரட்டைக்கண்நோக்கி
BISCUIT - மாச்சில்
BISMUTH - அம்பரை, நிமிளை, மதுர்ச்சி
BISON - காட்டேணி
BIT - துணுக்கு
BLACK - கருப்பு, கார்
BLACK GRAM - உளுத்தம் பருப்பு
BLACK EYED PEAS - வெள்ளை காராமணி
BLACKBERRY - நாகப்பழம்
BLACKBUCK - வேலிமான்
BLACKSMITH - கொல்லர்
BLADE - அலகு
BLEACHING POWDER - வெளுப்புத் தூள், வெளிர்ப்புத் தூள்
BLENDER - மின்கலப்பி
BLISTER PACK - கொப்புளச் சிப்பம்
BLUE - நீலம்
BLUEBERRY - அவுரிநெல்லி
BLUE VITRIOL - மயில்துத்தம்
BLUE-BELL - நீலமணி
BLUNT - மொண்ணையான, மொண்ணையாக
BLOOD VESSEL - குருதி நாடி, ரத்தக் குழாய்
BLOTTING PAPER - உறிஞ்சுதாள்
BOA (CONSTRICTOR) - அயகரம்
BOAT - தோணி, படகு
BOAT HOUSE - படகுக் குழாம்
BOILER - கொதிகலன்
BODYGUARD - மெய்க்காப்பாளர்
BOMB - வெடிகுண்டு
BONE, BONE MARROW - எளும்பு, மஜ்ஜை
BOOK - புத்தகம், நூல்
BOOK-KEEPING - கணக்குப்பதிவியல்
BOOMERANG - சுழல்படை
BOOT (FOOTWEAR) - ஜோடு
BOTHERATION - உபாதை
BORAX - வெண்காரம்
BORDER - எல்லை
BOREDOM - அலுப்பு
BOREWELL - ஆழ்குழாய் கிணறு
BORING - அலுப்பான
BORON - கார்மம்
BORROW - இரவல் வாங்கு
BOTTLE GOURD - சுரைக்காய்
BRAILLE - புடையெழுத்து
BRAKE - நிறுத்தான், நிறுத்தி
BRASS - பித்தளை
BRASSIERE - மார்க்கச்சு
BRAVADO - சூரத்தனம்
BREAD - ரொட்டி
BREWER'S YEAST - வடிப்போனொதி
BRIEFCASE - குறும்பெட்டி
BRIDGE - பாலம், வாராவதி
BRINJAL - கத்திரிக்காய்
BRITTLE, BRITTLENESS - நொறுங்கும், நொறுங்குமை
BROADBAND, BROADBAND CONNECTION - அகண்ட அலைவரிசை, அகண்டலைவரிசை இணைப்பு
BROCCOLI - பச்சைப் பூக்கொசு
BROKEN BEANS - மொச்சைக் கொட்டை
BROKER - தரகர்
BROKERAGE FIRM - தரககம்
BROMINE - நெடியம்
BRONZE - வெண்கலம்
BROOCH - அணியூக்கு
BRUISE - ஊமையடி
BRUSSELS SPROUTS - களைக் கோசு
BUBBLE WRAP - குமிழியுறை, குமிழிச் சிப்பம்
BUBONIC PLAGUE - அரையாப்பு(க்கட்டி)க் கொள்ளைநோய்
BUDGET - பொக்கிடு (வினை), பொக்கீடு
BUG (SOFTWARE) - இடும்பை
BUGLE - ஊதுகொம்பு
BULB (ELECTRIC) - மின்குமிழ்
BULLDOZER - இடிவாரி
BUN - மெதுவன்
BUNDLE - பொதி
BUOY (OF AN ANCHOR) - காவியா, காவியக்கட்டை
BURIAL URN - முதுமக்கள் தாழி
BURNER - விளக்குக்காய்
BUS - பேருந்து
BUS STOP - பேருந்து தரிப்பு, பேருந்து நிறுத்தம்
BUSH - புதர், பற்றை
BUSH (MECHANICAL) - உள்ளாழி
BUSINESS VISA - வணிக இசைவு
BUSY - வேலையாக/கம்மக்கையாக, வேலையான/கம்மக்கையான
BUTTER - வெண்ணெய்
BUZZER - இமிரி 


Tuesday, December 17, 2013

நவீன தமிழ் அருஞ்சொற்பொருள் - பகுதி1

A - வரிசை 

ABACUS மணிச்சட்டம்
ABBREVIATION குறுக்கம்
ABDUCTION ஆட்கடத்தல்
ABROAD வெளிநாடு
ACCESSORY துணைக்கருவி
ACCOUNTANT கணக்கர்
ACORUS வசம்பு
ACQUISITION கையகப்படுத்தல்
ACRE இணையேர்
ACROBAT, ACROBATICS - கழைக்கூத்து, கழைக்கூத்தாடி
ACT (OF LAW) கட்டளைக்கோல், கட்டளைச்சட்டம்
ACTINIUM நீலகம்
ACTIVITY செய்கைப்பாடு
ADAM'S APPLE கண்டம்
ADAPTATION (DRAMA, MUSIC ETC) தழுவல்
ADHESION ஒட்டுப்பண்பு
ADHESIVE பசைமம்
ADJECTIVE பெயர் உரிச்சொல்
ADRENAL GLAND, ADRENALINE அண்ணீரகம், அண்ணீர்
ADVANCE (MONEY) முன்பணம், உளவாடம்
ADVERB வினை உரிச்சொல்
AERIAL (ANTENNA) வானலை வாங்கி
AEROBRIDGE விமானப் பாலம், வான்பாலம்
AEROGRAMME வான்மடல்
AEROPLANE விமானம், பறனை
AEROSOL சொட்டூதி
AGENT முகவர்
AGENCY முகமையகம்
AGRICULTURAL TRACT பானல்
AGRICULTURE கமம், விவசாயம், வேளாண்மை
AIDS (ACQUIRED IMMUNO DEFICIENCY SYNDROME) வேட்டைநோய், உடற்தேய்வு நோய்
AILERON இரக்கைத் துடுப்பு
AIR காற்று
AIR BAG (காப்புக்) காற்றுப்பை
AIR-CONDITIONER குளிரூட்டி, குளிர்சாதனம், பனிக்காற்றுப்பெட்டி
>AIR-COOLER காற்றுப் பெட்டி
AIR FRESHENER காற்றினிமைத் திவலை
AIR MAIL வானஞ்சல்
AIR POCKET காற்று வெற்றிடம்
AIR WAYBILL வான் பார‌ப்ப‌ட்டி
AIRCRAFT வானூர்தி
AIRCRAFT CARRIER AIRCRAFT CARRIER
AIRHOSTESS விமானப்பணிப்பெண்
AIRLINE வானூர்தி
AIRLINER முறைவழி விமானம், முறைவழி வானுர்தி
AIRPORT பறப்பகம், வானூர்தி நிலையம், வானிலையம்
AIRSPACE வானெல்லை

APPOINTMENT (JOB) பணி அமர்த்தம்
APPOINTMENT (MEETING) (சந்திப்பு) முன்பதிவு
APPROACH (v.) அண்மு (வினைவேற்சொல்), அணுகு (வினைவேற்சொல்)
APRON (AIRPORT) ஏற்றிடம்
 APRON (KITCHEN) சமயலுடை
AQUAMARINE இந்திரநீலம்
ARBITRATION POWERS யதேச்சாதிகாரம், மேலாண்மையுரிமை
ARC LAMP வில் விளக்கு
ARCH தோரணவாயில், வளைவு
ARCH BISHOP பேராயர்
ARCH DIOCESE பேராயம்
ARECANUT பாக்கு
ARENA கோதா
ARMED ஆயுதபாணி
ARMNAMENT படைக்கலம்
ARREARS ஆண்டைச்சிகை, நிலவுத்தொகை
ARROGANCE ஆணவம், தெனாவெட்டு
ARROWROOT கூவை
ARSENIC பிறாக்காண்டம்
ARTERY தமனி
ARTILARY பீரங்கிப் படை
ARTHRITIS கீல்வாதம், மூட்டுவாதம்
ARTISAN கைவினைஞர்
ASAFOETIDA பெருங்காயம்
ASBESTOS கல்நார்
ASPARAGUS தண்ணீர்விட்டான்
ASPHALT நிலக்கீல்
ASSASINATION வன்கொலை
ASSEMBLY (MANUFACTURING) ஒன்றுகூட்டல்
ASSEMBLY (STRUCTURE) கட்டகம்
 ASSEMBLY LINE ஒன்றுகூட்டு வரிசை
ASSUMPTION தற்கோள்
ASSURANCE காப்பீட்டுறுதி
 ASTEROID சிறுகோள்
ASTONISHMENT திகைப்பு, ஆச்சரியம்
ASTRONAUT விண்வெளி வீரர்
AUGUST கடகம் மடங்கல்
AUTHENTICITY, AUTHENTIC சொக்க(மான), சொக்கம்
ATTAIN (v.) எய்து (வினை வேற்சொல்)
ATTENDANT ஏவலாள்
ATHLETICS தடகளம்
ATOL பவழத்தீவு
ATOMIC BOMB அணுகுண்டு
ATONEMENT பரிகாரம், பிராயச்சித்தம்
AUDIO கேட்பொலி
AUDIO CASSETTE ஒலிப்பேழை
AUTOMATIC TELLER MACHINE (ATM) தானியங்கி பணவழங்கி
AUTOMOBILE உந்துவண்டி, தானுந்து
AUTORICKSHAW தானி
AUTUMN கூதிர்காலம், இலையுதிர்காலம்
AQUA REGIA அரசப்புளியம்
AVAILABLE, AVAILABILITY கிடைக்கும், கிடைக்கப் பெறுதல்
AVALANCHE பனிச்சரிவு
AVENUE நிழற்சாலை
AVIATION பறப்பியல்
AVIONICS பறப்பு மின்னணுவியல்
AVOCADO வெண்ணைப் பழம்
 AXLE இருசு, அச்சாணி