Tuesday, June 11, 2013

சூரிய வணக்கத்தில் இருக்கும் அறிவியல் !!!!!


நம் முன்னோர்கள் நம்மை விட அறிவில் சிறந்தவர்கள், ஏற்க மறுத்தாலும் இது தான் உன்மை, சரி நாம் நம்முடைய தலைப்பிற்கு வருவோம். சூரிய வணக்கத்தில் மாபெரும் அறிவியல் கூற்று மறைந்து இருக்கிறது, அதிகாலையில் சூரியனில் இருந்து வரும் கதிரில் நாம் நினைத்து பார்க்காத வகையில் பலன்கள் இருக்கிறது , அதிகாலையில் சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதா (Ultra Violet) கதிரில் வைட்டமின்-டி (Vitamin-D) குவிந்து இருக்கிறது.
இந்த வைட்டமின்-டி நம் உடலுக்கு அநேக வகையில் பயன் தருகிறது. உயிர்ச்சத்து டி (Vitamin D) எனப்படுவது கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் கொண்ட ஒரு குழுமம் ஆகும். உயிர்ச்சத்து டி2 (ஏர்கோகல்சிபெரோல்) மற்றும் உயிர்ச்சத்து டி3 (கோளிகல்சிபெரோல்) என்பன உடற்செயலியல் தொழிற்பாட்டுக்குத் தேவையான உயிர்ச்சத்து டி வகைகள் ஆகும், பொதுவாக எண்களால் டி உயிர்ச்சத்து சுட்டப்படாவிடின் டி2 அல்லது டி3 அல்லது இரண்டையும் குறிக்கும். முதுகெலும்பிகளில் உயிர்ச்சத்து டி3 தோலில் இருந்து சூரியனின் புறஊதாக்கதிர்களின் வினை மூலம் உருவாகுகின்றது, இதைவிட இயற்கையாகவே சில குறிப்பிட்ட உணவுப்பொருட்களில் இருந்தும் பெற்றுக்கொள்ளமுடியும், செயற்கையாகவும் இவ்வுயிர்ச்சத்து உருவாக்கப்படுகின்றது; சில நாடுகளில் பால், மா, தாவர வெண்ணெய் போன்றவற்றிற்கு உயிர்ச்சத்து டி செயற்கையாகச் சேர்க்கப்படுகிறது,

அதிகாலை சூரிய கதிரினால் ஏற்படும் நன்மைகள் :
1) மார்பு புற்று நோய் கட்டுப்படுத்தும்,
2) கெட்ட பாக்டீரியாக்களை அகற்றும்,
3) தோல் சம்ந்தப்ட்ட அணைத்து நோய்களையும் சுகப்படுத்தும்,
4) அதிக கொழுப்புச்சத்தயை குறைக்கும்,
5) இரத்தக் கொதிப்பை குறைக்கும்,
6) தோல்லின் அடிப்பகுதிக்கு சென்று இரத்ததையும் , இரத்த நாளங்களையும் சுத்திகரிக்கும்,
7) பிரனா வாயுவை உடலுக்குள் அதிக அளவில் புகுத்தும், இதனால் நம்முடைய உடல் வலிமைப் பெரும்,
8) நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும்.
9) மன அழுத்ததை குறைக்கும்,

முக்கிய குறிப்பு :
   அதிகாலையில் தினமும்  10-15 நிமிடங்கள் சூரிய கதிர்கள் நம்மீது பட்டால் போதுமானது.

        நண்பகலில் வெளிப்படும் சூரியக் கதிர் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும், ஏனவே அதனை தவிர்க்கவும்.


இத்தக்கைய பயனை தரக்கூடிய ஒன்று அனைவர்க்கும் சென்று அடைய வேண்டும் என்று தான் இதனை இறைவனுக்கு வணக்கம் என்று கற்பித்தார்கள், ஏனெனில் நம் முன்னோர்கள் இறைப் பக்தி அதிகம் கொண்டவர்கள். நாம் இந்த அறிவியலின் பயனை நம் தலைமுறைக்கு கற்றுத் தந்து நாமும் பின்பற்றி நோயின்றி ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்.

உசாத்துணைகள்:


Monday, June 10, 2013

தாய் நாட்டை நேசிப்பவர்கள் இந்த வாக்கியத்தை தினமும் மனத்திற்குள் சொல்லவும்!

நாடு என்ன செய்தது நமக்கு என்று கேட்ப்பதை நிறுத்து,
நீ என்ன செய்தாய் அதற்க்கு என்னும் கேள்வியை மனதில் எழுப்பு!!!!!!!